Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மனிதர்களை நேசித்த மனிதர்கள் : லலித் - குகன்

லலித்  - குகன் இருவரும், காணாமல் போனவர்களை தேடிச் சென்றதற்காய் கடத்தப்பட்டனர். உலக நாகரீகங்கள் மனிதனை நன்றாக வாழ்வதற்காகவே நாள்தோறும் மாறி வருகின்றன. மனிதர்கள் பலவகையான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். சிலர் போராடி வாழ்கிறார்கள். பலரோ சாவை எதிர் கொள்கிறார்கள். மனித குலத்தில் ஒரு சிறு கூட்டமே போராட தயாராக இருக்கின்றது. மனிதர்களுக்கு உதவவும் தயாராக இருக்கின்றது.

Read more ...

சோசலிசக் கவிதைகள்

எனக்கு ஆருயிர்க் காதலி

ஒருத்தி இருந்தால்

ஒரு இரவின் முடிவில் - அவள்

போலீஸ்காரர்களால்

படுகொலை செய்யப்பட்டாள்.

 

ஏ! காடே ! நீ என் ஆருயிர்க் காதலியாய் இரு !

நீயே என் மணப்பெண்.

என் இதயத்தின் அன்பு

வெளிச்சமிடுகின்றது, வெள்ளமாய் ஓடுகிறது.

அந்தக் காதல் வார்த்தைகளை- நான்

எப்போழுதும் சொல்லத்துணிந்ததில்லை !

ஆனால்.... அருமைக்காடே !

உன் செவிகளில் மெதுவாக உச்சரிக்கிறேன்.

Read more ...

அழிவின் மறுபக்கம் கூடங்குளம்

கூடங்குளம் அணுமின்னிலைய எதிர்ப்புப் போராட்டம் எமது கோடிப்புறத்திலேயே, நடந்துகொண்டிருக்கின்றது.

அணுகுண்டு வெடித்தால்த்தான் அழிவு...

அணுவுலை வெடிக்காமலே அழிவு...

கூடங்குள அணுமின் உலையை இழுத்து மூடு..!

போராடும் மக்களோடு கை கோரு...

இது நமது போர்.

மன்னார் வளைகுடா மற்றும் யாழ் தீபகற்பம் எனும் இலங்கையின் தலைமாட்டில் எப்போதும் மக்கள் தத்தம் தலையணைக்குள்ளேயே அணுக்குண்டொன்றினை வைத்து உறங்கும்படியான நிம்மதி கெட்ட இரவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றது கூடங்குளம் அணுமின்னிலைய நிர்மாணம்.

Read more ...

மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01

"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயற்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!" என்றார் கார்ல் மார்க்ஸ். அவர் அப்படி வாழ்ந்தார் என்பதால், உலகமே அவரிடம் இருந்து கற்கின்றது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாகவும், ஆளும் வர்க்கத்தின் எதிரியாகவும் இருக்க முடிகின்றது. அவர் மரணித்து 130 வருடம் கடந்த நிலையில், இதுதான் எதார்த்தம். எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் அவர் எடுத்துக் காட்டிய உண்மைகளை மறுத்துவிடவோ மாற்றிவிடவோ முடியவில்லை.

Read more ...

காத்திருப்போம்!

நேற்று வரை

நடந்தவற்றை

திரும்பிப்பார்!

 

உனக்கும்

எனக்கும்

எனனதான் மிச்சமிருக்கு!

Read more ...

ஊமை நெஞ்சின் ஓசைகள் (சிறுகதை)

பால் வைச்சு தண்ணியும் வாத்து பிள்ளை குளிச்சிட்டும் வந்திட்டுது. இனிமேல் பிள்ளை வெளிக்கிட்டு வெளியாலவர எப்பிடியும் குறைந்தது மூண்டுமணித்தியாலம் எண்டாலும் எடுக்கும். சொந்த பந்தங்கள் எண்டு நிண்ட சனங்களும் திருப்பி வெளிக்கிடவெண்டு வீடுகளுக்குப் போனதாலேயும், வீடீயோ அண்ணையும் கோலை ஒருக்கா படம் பிடிக்க போனதாலேயும், மேக்கப்புக்காரியும்

பிள்ளையின்றை அம்மாவும், நானும் தான் வீட்டில தனியா நிண்டோம். எனக்கு பொழுது போகாதபடியால் அங்கு மேசையில் இருந்த சில விளம்பரப் பேப்பர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிசன் மெல்லெனக் கதவைத் திறந்து அடிக்குமேல் அடிஎடுத்து.., கிட்டத்தட்ட ஒரு வெறிகாரன் போல பக்கத்திலிருந்த கதிரையையும் பிடித்து நடந்து வந்து, மூச்சையிழுத்துக் களைப்பாறுவது போல், சாடையாக என்னையும் பார்த்துப் புன்னகைத்தபடி முன்னிருந்த சோபாவில் அமர்ந்தார். என்னடா இந்த மனுசன் விடிக்காலையிலேயே வெறியுடன் வந்திருக்கிறாரே எண்டு மனம் சங்கடப்பட்டுக் கொண்டது.

Read more ...

விஜய பாடசாலையில் தலைகள் துண்டிக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தன.

 

இலங்கைக்கும் துண்டிக்கப்பட்ட தலைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. புதை குழிகள் காரணமாக அரசாங்கங்கள கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. புதைகுழிகளினாலேயே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் உண்டு. இந்த மண்ணில் இன்னும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமுள்ளன.

இன்முறை மாத்தளைப் பிரதேசத்தில் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை புதைகுழி குறித்து தகவல் கிடைப்பதற்கு முன்னரேயே 71 கிளர்ச்சியோடு சம்பந்தபட்டவர்களுடையது என்று பொறுப்பு வாய்ந்தவர்களால் கூறப்பட்டது. ஆனால் அவை 71ஐ சேர்ந்தவர்களதல்ல, 89ஐ சேர்ந்தவர்களது என்று தெரிய வருகிறது. ஆம், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் ' பொறுப்புக் கூற வேண்டியவர்களேதான்" ' பலகடுவ நீரூற்றுக்கு பக்கத்தில் கை கால்களைக் கட்டி 22 பேரை உயிரோடு பெற்றோல் ஊற்றி கொளுத்தினார்கள்.

Read more ...

சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் ஜீட் சில்வா புள்ளேயுடனான நேர்காணல்

"சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்"

கேள்வி:

யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா?

ஜுட்: வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.

Read more ...