Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

'கத்தி' சினிமாவும் தமிழ் தேசியமும்

'கத்தி' சினிமா படத்தை வெளியிட்ட திரை அரங்கங்கள் தாக்கபட்டுள்ளது. இதை 'இடது' தேசியம் சார்ந்து கண்டிக்கும் போது தனிநபர்களாகவும் குழுக்களாகவும் மர்ம மனிதர்களின் வன்முறையாக முன்னிறுத்துகின்றனர்.

அதே நேரம் 'லைக்கா' போன்ற தனிபட்ட முதலாளிகளை எதிரியாக சித்தரிக்கும் குறுகிய இனவாதத்தை பிரச்சாரம் செய்கின்றனர்.  'கத்தி' சினிமாவுக்கு 'லைக்கா' என்ற தமிழ் முதலாளி போட்ட முதலீட்டை வைத்து 'தமிழ்' தேசியம் - 'இடது' தேசியம் இரண்டும் குறுந்தேசிய அரசியல் பிழைப்புவாதத்தை நடத்தி வருகின்றது.

மக்களுக்கு எதிரான சினிமாவின் நவதாரள அரசியல் உள்ளடகத்தை முழுமையாக எதிர்க்காது தனிபட்ட சினிமாவை தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு புறம் காட்டுகின்றனர். மறுபுறம் முதலாளித்துவத்தை எதிர்க்காது தனிப்பட்ட தமிழ் முதலாளியை எதிர்ப்பதானது, மக்களை முட்டளாக்க முனைகின்ற அரசியல் சந்தர்ப்பவாதமாகும்;.

இனவாதத்தின் அச்சில் நின்று கட்டமைக்கின்ற இந்த குறுகிய பிரச்சாரம், தமிழ் மக்களுக்கு எதிரான ஒட்டு மொத்த முதலாளித்துவதையும் அது உருவாக்கும் நவதாரள சினிமைவயும் பாதுகாக்கின்ற அரசியல் பித்தலாட்டமாகும்.