Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"தமிழீழத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன்"

ஜனாதிபதி மகிந்தாவின் அறிவித்தல், தமிழீழத்தை கோருவதால் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டு வந்தாக கூறுகின்றது. இதன் மூலம் மக்களை முட்டாளாக்கி வாக்குகளை கறக்க முனைகின்றார்.

இதன் பின்னணியில்

1.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை கொண்டு வந்தது "தமிழீழத்தை" கோரியதற்கு எதிராக அல்ல, நவதாரள பொருளாரத்தை முன்னெடுக்கத்தான் என்ற உண்மையை மூடிமறைக்கின்றார்.

2.தமிழீழத்தை கோருவதால் தான் இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தொடர்ந்து வைத்து இருப்பதாக கூறுவது, மக்களை இனவாதத்தின் கீழ் அணிதிரட்டுவதற்கான அப்பட்டமான பொய்யாகும்.

தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்கள் இந்த உண்மையை இனம் கண்டு, ஆட்சி மாற்றத்தையல்ல ஆட்சி முறையை மாற்றுவது பற்றியதான அரசியலின் கீழ் அணிதிரள்வதே அவசியமானது.