Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"பிரபாகரனுக்கு" தேவையானதையே அரசாங்கம் மட்டுமல்ல கூட்டமைப்பும் செய்கின்றது.

இனவாதத்தை அரசியலாகக் கொண்ட கூட்டமைப்பினது பிரதிநிதியான சுமத்திரன், புலிகளுக்கு தேவையான கொள்கையை அரசு முன்னெடுப்பதாக பாரளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்குக்கு வெளிநாட்டவர்கள் செல்ல விசேட அனுமதி வேண்டும் என்ற பாஸ் நடைமுறை, பிரபாகரனின் கொள்கையாக மட்டும் சுமத்திரனுக்கு தெரிகின்றது. ஆனால் பிரபாகரனினது அரசியல் நடத்தையானது கூட்டமைப்பின் நடத்தை அல்லவா! அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது இனவாதமல்லவா. இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு பதில், இனவாதத்தை தூண்டி மொழி ரீதியாக மக்களை பிளக்கும் செயற்பாடு தான், அரசினதும் - கூட்டமைப்பினதும் செயற்பாடாகும்        

தங்களது இனவாத நடத்தையில் பாஸ் முறையை மூடிமறைக்கவும், இனவாதத்தை துண்டும்  செயலை தொடரவும், வெறும் பாஸ் பிரச்சனையாக பிரித்து குறுக்கி குற்றச்சாட்டுவதானது, உண்மையில் தங்கள் கொண்டு இருக்கக் கூடிய "பிரபாகரன்" கொள்கையை மூடிமறைப்பதாகும்.     

அரசின் இனவாதக் கொள்கையையே கூட்டடைப்புக் கொண்டு இருப்பதும், அதன் மூலம் தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்களை பிரித்து வைத்திருக்கும் அரசியல், அடிப்படையில் மக்களிடையே இனவாதம் வேலியாகக் காணப்படுகின்றது. இனவாதத்தை எதிர்த்து, மக்கள் இனம் மொழி கடந்து போராடுவதை தடுக்கும் பின்புலத்திலேயே "பிரபாகரன்" கொள்கையாக பரஸ்பரம் குற்றம் சாட்டுவதும் அதை முன்னெடுப்பதுமே அரசியலாக தொடர்ந்து அரங்கேறுகின்றது.