Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மீரியபெத்த ஒரு மாத நினைவு நிகழ்வு

எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ;ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெறும்.

பெருந்தோட்டச் சமூக நடவடிக்கைக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்விற்கு இக்குழுவின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரணி இ.தம்பையா, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர்.யோகராஜன், வண.பிதா கீதபொன்கலன் ஆகியோரின் தலைமை தாங்குவார்கள்.

இந்நிகழ்வில் மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதுடன் மண்சரிவிற்கு முன்னும் பின்னும் மீரியபெத்த நிலைமை பற்றிய காணொளி காண்பிக்கப்படும்.

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம்- புவியியல் பார்வை எனும் தலைப்பில் சட்டத்தரணி இரா.சடகோபனும், மீரியபெத்த மண்சரிவு- சமூகவியல் பார்வை எனும் தலைப்பில் ஆசிரியர் சார்ள்ஸ் மேர்வினும், மீரியபெத்த மண்சரிவும் மலையக அரசியலும் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் பழனி விஜயகுமாரும் உரை நிகழ்த்துவார்கள்.

மலையக மக்களுக்கான பாதுகாப்பான தனிவீட்டு உரிமைக்கான மீரியபெத்த பிரகடனத்தை சட்டத்தரணி நேரு.கருணாகரன், சட்டத்தரணி முதித் திசாநாயக்க, த.பிரதீஸ் ஆகியோர் சமர்ப்பிப்பர்.

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் தொடர்பான பாடல்களும் நிகழ்ச்சியின் இடையே இசைக்கப்படும்.

இப்படிக்கு,
இணைப்புச் செயலாளர்கள்
சட்டத்தரணி இ.தம்பையா

பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு