Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் பத்திரிக்கையாளர் சந்திப்பும் துண்டுப்பிரசுர விநியோகமும். (படங்கள்)

இடதுசாரி முன்னணியின் அங்கமான மற்றைய கட்சித் தலைவர்கள், இடதுசாரிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் துமிந்த நாகமுவ அவர்களுடனன் இணைந்த, இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பும் துண்டுப்பிரசுர விநியோகமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் இப்பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் அளிக்கப்பட்டன.

யாழ் பஸ்தரிப்பு நிலையத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம் இடம்பெற்றது. அனைத்து இடதுசாரிய முன்னணி தலைவர்களும் இந்த இரு நிகழ்விலும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. மக்கள் ஆர்வமாக துண்டுப்பிரசுரத்தினை பெற்றுக் கொண்டமை சிறப்பம்சம் ஆகும்.