Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் மௌனப் போராட்டம்!

இன்று காலை முதல் முன்னிலை சோசலிச கட்சியினர் கோடடை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற காணாமலாக்கல்களையும் கடத்தல்களையும் வெளிப்புடுத்துமாறும், குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே என வலியுறுத்தியும் இந்த மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பெரும் தொகையானோர் பங்கு கொண்டதுடன் காணாமல் போனவர்கள் கடத்தலுக்கு உள்ளானவர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் உள்ளோரின் குடும்பங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக வடக்கு கிழக்கில் இருந்தும் புதிய அரசிடம் தமது உறவுகளை தேடித் தருமாறு கணிசமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.