Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

44வது ஏப்பிரல் வீரர்கள் தினம்: நினைவுகூரல் நிகழ்வுகள் (படங்கள்)

44 வருடங்களிற்கு முன்னர் 1971ம் ஆண்டு ஏப்பிரல் 5ம் திகதி  உழைக்கும் மக்களின் விடுதலைக்காக இடதுசாரிய சிந்தனை கொண்ட இளைஞர்களினால் திடீர் கிளர்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது. இந்த கிளர்ச்சி இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

பெரும் பாலும் தென்னிலங்கையின் கிராம புறங்களையும் ஒரு சில சிறு நகரங்களையும் இளைஞர் குழு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தது. சிங்கள இன இளைஞர்களும், யுவதிகளும் இந்த ஆயுத மேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்திய ராணுவத்தின் தலையீட்டினால் இந்த கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்டதுடன் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கிளர்ச்சியின் போது பல இளைஞர்களும் யுவதிகளும் அரச படைகளின் பயங்கரமான சித்திரவதைகள், கொடுமைகளின் பின்னர் கொல்லப்பட்டனர். இந்த வீரர்களின் போராட்ட முறைமை குறித்த விமர்சனங்கள் நிறைய உண்டு.  இதற்கு அப்பால் இவர்களை ஞாபகார்த்தம் செய்யும் தினத்தில் அவர்களின் இலட்சியங்களை அடைவதற்க்கான சரியான அரசியல் மார்க்கத்தை கண்டடைவதும் அதனை நடைமுறைப்படுத்துவதுமே இந்த வீரர்களிற்கு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கம். நேற்றைய தினம் பல நகரங்களில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படங்களை இங்கே காணலாம்.