Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பாலாதம்பு வலதுசாரியத்துடன் சமரசம் செய்யாத ஆளுமை!

வலதுசாரி தொழில் தருனர்களிமுடம் வலதுசாரி சம்பிரதாயங்களுடனும் சமரசம் செய்யாத, தொழிலாளர்களின் அக்கறையை மேலாக கொண்டிருந்த இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பாலா தப்புவிற்கு இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் புரட்சிகர இறுதி வணக்கத்தை செலுத்துகிறது.

இடதுசாரி அரசியலை தெரிவு செய்து கொண்ட பாலாதம்பு இலங்கையின் இடதுசாரி இயக்கங்களில் இருந்து விலகி தனிப் போக்கை கடைபிடித்து வந்தார். இடதுசாரி இயக்கத்தின் மத்திய தளமாக தொழிற்சங்க இயக்கத்தை கட்டுவதற்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளார். அவரின் வெற்றி தோல்விகள் பற்றி மதிப்பிடுவது இலங்கையின் இடதுசாரி இயக்கத்தை மதிப்பிடுவதன் முக்கிய பகுதியாக இருக்கும்.

பூகோலமயமாதல் சூழ்நிலையில் உலகலாவிய ரீதியில் இடதுவாரிகள் பலமடைய வேண்டியது பற்றி அக்கறை செலுத்தினார். முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு சவாலாக விளங்கினார். அவருடைய தனிப்பட்ட வாழ்வு பொதுவாழ்கையில் ஈடுபட்டுள்ளோருக்கு இன்னொரு மாதிரி ஆகும். அடுத்தவரை சிந்திக்காது செயற்படும் ஒருவகை இளம் சமூகத்தினரின் உருவாக்கம் பாலாதம்புவின் பொதுவாழ்கை, பொது நலன் போன்றவற்றுக்கு ஊறு விளைவிக்க முடியவில்லை. தனிநபர்வாத சவால்களுக்கு அவரைப் போன்ற ஒரு சிலரின் உறுதி மட்டும் போதுமான எதிர்ப்பாக இல்லாவிடினும், அவ்வுறுதி தனிநபர்வாதத்திற்கு எதிரான மாற்று பாதை பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் கட்டி வளர்க்கப்பட்டதாகும்.

பாலா தம்புவின் இடதுசாரி அரசியலின் முன்னோக்கிய பாய்ச்சல் என்பது அவரது தொழிற்சங்கமும், அவரது அரசியல் வழிமுறையை ஏற்றுக் கொண்டவர்களினதும் எதிர்கால பயணம் செயற்பாடு போன்றவற்றினை அடிப்படையாக தீர்மானிக்க முடியும்.

காலனித்துவ காலத்திலும், நவ காலனித்துவ காலத்திலும் வாழ்ந்து சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட அவரின் வழிமுறை பெரிதும் சமூக ஜனநாயகத்தை நோக்கிய அடிப்படையை கொண்டிருந்தது எனலாம். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்விலும் முற்போக்கான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவரின் மறைவு நிச்சமாக இடைவெளி ஒன்றை ஏற்படுத்தும்.

இணை அழைப்பாளர்

இ.கொ.ஐ. கேந்திரத்தின் இடையேற்பாட்டுக்குழு

டபில்யூ. சோமரட்ண