Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சப்ரமுவா பல்கலைக் கழக மாணவர்கள் சாந்திகுமார்-யோகராசனுக்கு நடந்தென்ன?

சப்ரகமுவா பல்லைக்கழக தமிழ் மாணவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தை கண்டித்து அஜித்குமார பா.உ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

2014-08-03 ஆம் திகதியும் அதற்க்கு முன்பிருந்தும் சப்ரகமுவ​ பல்கலைகழகத்திலும் ஏனைய பல்கலைக்கழங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் எதிரான அடக்குமுறைகள், ஜனநாயக உரிமை மறுதலிப்புகள் மற்றும் அவர்களது கற்றல் உரிமைக்கு இடையூறான நடவடிக்கைகள் விரிவடைந்து வருகின்றன. எனவே இவ்விடயம்​ தொடர்பாக பாராளுமன்றத்தினதும் நாட்டு மக்களினதும் கவனத்தை ஈர்த்துக்கொள்வதன் மூலம் பல்லைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வுக்கான பங்களிப்​பை பெற்றுக்​கொள்ள முடியும் என நான் நம்புகின்றேன். தற்போதைய அரசாங்கம் கல்வியை விற்பனை பண்டமாக்கும்​ செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்காக பல்வேறு தந்திரேபாயங்ளையும், அதற்கு தேவையான சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதிலும் முனைப்பு கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக புத்திஜீவிகள், கல்விமான்கள், பல்கலைக்கழக பேராசிரியாகள், தொழிற்சங்க தலைவாகள், பெற்றோர், தேசப்பற்றுள்ள மக்கள் ஆகியோர் கல்வி கொள்ளைக்கு எதிராக அணிதிரள்வதை தோற்கடிக்க அரசாங்கம் பல்வேறுவிதமான அடக்குமுறைகளையும் சூழ்ச்சிகளையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இவற்றின்​ வெளிப்பாடுகளில் ஒன்றுதான் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. இச் செயல்பாடுகளை கல்வியை விற்பனை பொருளாக்கும் நிகழ்ச்சி நிரலை இலகுபடுத்திக் கொள்ள அரசாங்கம் கையாளும் தந்திரோபாயமாகவே நாம் கருத வேண்டும். குறிப்பாக சுதந்திரக் கல்வியை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடும் அனைவரிடமும் நான்​ கேட்டுக் கொள்வது இத​னை தனித்த ஒரு சம்பவமாக கருதாமல், இதனை அரசாங்க செயற்திட்டங்களின் ஒரு அங்கமாக கருத வேண்டும் என்றாகும். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக மொழிக் கல்வி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனான கிளிநொச்சி முகமாலையை​ சேர்ந்த சுதர்சன் சாந்திகுமார் முதலாம் ஆண்டு மாணவாகளுக்குரிய சாந்த பண்டார விடுதியில் தங்கியிருந்தார். இவர் 2014-08-03 அன்று இவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இவரை ஐந்து பேர் கடுமையாக தாக்கியதுடன் கூரிய ஆயுத்த்தினால் உடலில் கீறல் காயங்ளையும் ஏற்படுத்தியுள்ளனர். தாக்கிய பின்னர் அவரை வெளியே போட்டுவிட்டு சென்றுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான சந்திகுமார் பலாங்கொடை​ வைத்தியசா​லையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் இரத்தினபுரி வைத்தியசலைக்கு மாற்றப்பட்டார்.

நான் இந்த ​உரையை தயார் செய்யும் போது அவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளர். ஆனாலும் அவரை இரத்தினபுரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பொலிஸர் சட்டவிரோதமாக தடுத்துவைத்திருப்பதாக அறிகிறேன்.. இந்த சம்பவம் நடந்த ​அதே தினம் இரவு தமிழ் மாணவர்களை 10 நாட்களுக்குள் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளி​யேறுமாறு அச்சுறுத்லுடனான எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக 2014-08-10ஆம் திகதி வெளியான "ஜனரல" என்னும் சிங்கள வாரப்பத்திரிகை வெளியிட்ட செய்தியை ஹன்சாட் பதிவுக்காக சபைக்கு சமர்ப்பிக்கின்​றேன். தமிழ் மாணவ, மாணவியருக்கு தமிழ், ஆங்கில மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட எச்சரிக்கை சுவரொட்டியும் பல்லைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் 10 நாட்களுக்குள் தமிழ் மாணவ மாணவிகள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறா விட்டால் மாணவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காவர் எனவும், மாணவிகள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. 2014-07-11ஆம் திகதியும் இ​தே போன்ற எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பிரிவினர் இருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த பாதுகாப்பு பிரிவிரை அகற்றி, அதைவிட மூன்றுபங்கு அதிகரித்த கட்டணத்தில் கோட்டபே ராஜபக்ஸவின் பாதுகாப்பு நிறுவனமான "ரத்னா லங்கா" பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சுதர்சன் சாந்திகுமார் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து 10 மீற்றர் தொலைவில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் சொல்கிறார்கள் மாணவன் தாக்கப்பட்டதை தாம் காணவில்லை என்று. பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டி ஒட்டுகிறார்கள், அது பாதுகாப்பு பிரிவினருக்கு ​தெரியாது. எனவே அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். தாக்கப்பட்ட மாணவன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 40 நாட்கள் மட்டுமே ஆகிறது அந்த பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவாகள் இல்லை, அல்லாவிட்டால் பகிடிவதை என கதை அளந்திருப்பார்கள். எஸ்.பி. திஸாநாயக்கா இருந்திருந்தால் நிட்சயமாக இந்த சம்பவத்தை பகிடிவதை என்றே கூறியிருப்பார். பல்கலைக்கழக உபவேந்தர் செல்கிறார் அந்த மாணவன் தன்னை தானே தாக்கி கொண்டதாக. இது புதுமையான​ க​தையளப்பல்லவா? இது போன்ற கதைகள் முன்னரும் நாம் கேட்டிருக்கிறோம். ​​இதை யார் சொல்கிறார் பல்கலைக் கழகத்துக்கு பொறுப்பான ​உபவேந்தர் கூறுகிறர்.

இத்துடன் நிற்கவில்லை 2014-08-05 சமூக மொழிக் கல்வி பரீட்சை எழுதிக் ​கொண்டிருந்த வவுனியாவை சேர்ந்த ​ யோகராஜா நி​ரோஜன் என்ற மாணவன் 11-30 மணியளவில் பரீட்சை மண்டபத்துள் பிரவேசித்த பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கடத்தி செல்லப்படுகிறர். இது நடந்தது நிர்வாகத்தின் உதவியுடனாகும். நாங்கள் இந்த பாராளுமன்றத்தில் கேட்கிறோம் நான்கு நாட்களுக்குமுன் சம்மந்தப்பட்ட மாணவனின் வீட்டுக்கு​ சென்று விபரங்கள் பெறப்பட்டது. யோகராஜா செய்தகுற்றம் என்ன? யார் முறைப்பாடு செய்தார்ககள்? குற்றச்சாட்டு என்ன?

இப்போது சொல்கிறர்கள் அவர் புனர்வாழ்வு நிலையத்தில் இருக்கிறார் என்று. பயங்கரவாதிகள் என ​அடையாளப்படுத்தப்பட்ட, பயங்கரவாதத்திற்க்கு ​தலைமை தாங்கியவர்கள், புனர்வாழ்வு பெறாதவர்கள் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். புனர்வாழ்வு பெற்று ​வெளியேறிய யோகராஜா எந்த முறைப்பாடுகளுமின்றி, பிடிஆணை இல்லாமல் பரிட்சை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கடத்திச்​ செல்லப்படுகிறார். இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முறையிட சென்ற கபிலன், மனோஜ் என்ற மாணவர்களுக்கு நிர்வாகம் கொடுத்த பதில் இது உங்களுக்கு அவசியமற்றது நீங்கள் உங்களடைய வேலையை மட்டும் பாருங்கள் என்பதாகும். இம் மாணவர்கள் இருவரினதும் அடையாள அட்டையை பாதுகாப்பு பிரிவினர் வாங்கிக் ​கொண்டனர். நீங்கள் என்ன செய்ய முயல்கிறீர்கள்?

பல்கலைக்கழக மாணவர் பிரதிநிகள் இது தொடர்பாக உபவேந்தரிடம் வினவியபோது, அவர்ளை பேசி துரத்தினார். ​இதையடுத்து மாணவர் பிரதிநிதிகள் சமநல ​பொலிஸ் நிலையம் சென்று யோகராஜா தொடர்பாக விசாரித்தார்கள். அங்கு கி​டைத்த பதில் இனி யோகராஜவை நீங்கள் காணமுடியாது, வேண்டுமானால் அவரது பெற்​றோரை வரச்சொல்லுங்கள் என்றாகும். இவ்விடயத்தில் முன்னிலையில் செயல்பட்ட தமயந்த சம்பத்குமார என்ற மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பொலிஸார் அவரது ​பெற்றோருக்கு விடுத்த எச்சரிக்கைதான், முடிந்தளவு விரைவாக மகனை பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கிக் கொள்ளுங்கள், அல்லது நாங்கள் அவரை ஐந்து வருடம் சிறைக்கு அனுப்புவோம் என்றாகும். இதேபோன்ற எச்சரிக்கை நான்காவது வருட கற்கைநெறி மாணவன் நிரோஷன் என்பவரின் பெற்றோருக்கும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைகளுக்கு மத்தியிலும் 07ஆம் திகதி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி சப்ரமூவா பல்லைக்கழக அனைத்து மாணவர்களும் ஒன்றணைந்து இந்த அராஜகத்திற்கு எதிராக ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநடவடிக்கைக்கு சிலதினங்கள் முன்பதாக அப்பிரதேசத்தில் இனவாதத்தை உசிப்பிவிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்பிரதேச மக்கள் அந்த பொறியில் சிக்கவில்லை. அதற்காக நாங்கள் அப்பிரதேச மக்களுக்கும், மாணவர்களுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போது நடந்திருப்பது என்ன? 507 நாட்களுக்கு ​மேலாக பல்லைக்கழக மாணவர் ஒன்றியம்​ தடை செய்யப்பட்டுள்து. இதுபற்றி மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்து பெற்ற உத்தரவை உபவேந்தர் 132 நாட்கள் மீறப்பட்டுள்ளது. தற்போது மாணவர் மீதான அடக்குமுறையை தொடர்வதற்க்கு வசதியாக இனவாதத்தை உசுப்பிவிட முயற்சிக்கப்படுகிறது. இந்த நிலை​மைக்கு பாதுகாப்பு அமைச்சும், அதன் செயலாளரும், பல்கலைக்கழக உபவேந்தரும் பதில் சொல்லியாக ​வேண்டும்.

பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் யார். இந்த அரசாங்கம் பின்பற்றும் நவலிபரல்வாத முதலாளித்துவ பொருளாதார முறைமைக்கிணங்க கல்வியை விற்பனை பண்டமாக மாற்றியமைக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சட்ட​ திட்டங்ளை அமுல்படுத்த தயாராகும் சந்தர்ப்பத்தில், மாணவர் போராட்டங்கள் காரணமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.​ எனவே மாணவர்களை இனவாத ரீதியில் பிளவுபடுத்தி மாணவ சமூகத்தின் போராட்ட சக்தியை சீர்குலைக்கும் தந்திரோபாய திட்டத்திற்கிணங்க​வே பல்​கலைக் கழக மாணவாகள் பலியாக்கப்படுகிறார்கள்.