Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை! புபுது ஜாகொட

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது மக்களின் குறைகளே அன்றி ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட குறைகளை அல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற இடதுசாரிகளின் நடவடிக்கை என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் பதவிகளை தனது எண்ணத்திற்கு ஏற்றது போல் மாற்றங்களை செய்யும் அதிகாரத்தை இரத்து செய்வற்காக ரத்ன தேரர் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கோருகிறார்.

தீர்மானம் எடுக்கும் அமைச்சர்களின் அதிகாரங்களை ஜனாதிபதி செயலாளர்கள் ஊடாக பறித்து விட்டதை மைத்திரிபால சிறிசேன ஜனநாயக பிரச்சினையாக எண்ணிக்கொண்டிருக்கின்றார். எனினும் மக்களின் பிரச்சினை வேறானது.

எவரும் அது பற்றி பேசுவதில்லை. எப்படியான சூழ்ச்சிகளை செய்து, பணத்தை வீசி எறிந்து அதிகாரத்தை கைப்பற்றவே முயற்சித்து வருகின்றனர்.

கோடி கணக்கில் பணத்தை செலவிட்டு நாடு முழுவதும் சுவரொட்டிகள், கட் அவுட்டுகள் வைத்தால், தனது எண்ணத்திற்கு ஏற்ப வாக்குகளை சேகரித்து கொள்ளலாம் என மகிந்த ராஜபக்ஷ எண்ணுகிறார்.

கட்சி தாவும் நபர்களின் எண்ணிக்கையை வைத்து அதிகாரத்தை காண்பிக்கலாம் என மைத்திரிபால கருதுகிறார் எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.