Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அன்று குடும்பம் - இன்று கூட்டு, நாடோ குழப்பத்தில்; முறையான மாற்றம் - இடதுசாரிகளின் பலம்

 பொதுத்தேர்தல் அண்மிக்கிறது அல்லவா?

இந்த தேர்தலில் நடைபெறப் போவது அடுத்து வரும் 05 வருடங்களில் எங்கள் வாழ்க்கையின் தலைவிதி என்ன என்பதை தீர்மானிக்கப் போகிறது.

அக்காலப்பகுதியினுள் எங்கள் பொருளாதார வாழ்க்கைக்கு நிகழப் போவது என்ன? எங்கள் அரசியல் உரிமைகளுக்கு  நடக்கப்போவது என்ன?  அதற்காக எடுக்க வேண்டிய தீர்மானங்கள்  எவை?  அந்த தீர்மானங்களுக்கு எங்களையும் இணைத்துக் கொள்வார்களா? இல்லையா? அவைகளுக்கு எதிராக, அவற்றை மாற்றியமைக்கும் உரிமை எங்களுக்கு கிடைக்குமா?  இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப் போவது பொது தேர்தலில் வெற்றி பெறும் தரப்பினரேயாகும். ஆதனால் வாக்கு கேட்கும் யாவரும் இந்த பிரச்சனைக்கான தங்களின் எண்ணப்பாடுகளை தெரிவித்தில்லை.

 யாருமே அவற்றை சொல்வதில்லைதானே?

அதுதான் பிரச்சனை. இந்த தேர்தல் அறித்த நாள் தொடங்கி நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வித்தியாசமானவை.

• தங்களின் ஆட்சி காலத்தில் எங்கள் சமுகத்திற்கு மாபெரும் சீரழிவை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்ஸ திரும்பவும் ஆட்சிக்கு வருவாரா? வரமாட்டாரா? அவருக்கு கூட்டணியில் போட்டியிட இடம் கிடைக்குமா இல்லையென்றால் வேறு கட்சிகள் மூலமாக போட்டியிடுவாரா? போன்ற பிரச்சனைகள் பேசப்பட்டன. மஹிந்த இறந்து மீண்டும் உயிர் பெற்றது போல் புதுப்புது கதைகளை சொல்லிக் கொண்டு எங்கள் முன் வருகிறார்.

• மைத்ரிபால சிறிசேன அவர்கள் பற்றி நடந்ததும் அவ்வாறான பேச்சுக்களே. அவர் சில சமயங்களில் தனது கட்சியின் முடிவுகளுக்கு உட்பட்டவராக இருக்கிறார். இன்னொரு சமயத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு உதவி நல்கியவர்களின் அழுத்தங்களுக்க உட்பட்டவராக இருக்கிறார். உறுதியான கொள்கைகள் எதுவுமே காணப்படவில்லை. இறுதியில் தனக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்து மஹிந்த சென்ற வழியிலேயே இவரும் செல்கிறார்.

• ரணில் விக்ரமசிங்க என்ன செய்வார், அவர் மைத்திரியோடு நட்பு கொள்வாரா அல்லது அவருடன் கோபங்கொள்வாரா என எதிர்பார்த்திருந்தனர். தற்போது அவர் வந்து ஐ.தே.கட்சியின் அரசை அமைப்பதற்கான வரத்தை வேண்டி நிற்கிறார். 2002-2004 காலப்பகுதியில் அவரின் தன்மைகள் எங்கள் யாவருக்கும் தெரியும். என்றாலும் அது பற்றி ரணில் மௌனம் காக்கிறார். அவர் தனது பொருளாதார அல்லது அரசியல் பார்வையைப்பற்றி ஒன்றும் சொல்வதில்லை. அவரின் நோக்கம் மகிந்தாவிற்கு எதிராக அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே. (அது மகிந்தாவிற்கு எதிரான அதிகாரப்போட்டியே தவிர மகிந்தாவின் மக்கள் விரோதக் கொள்கைகளிற்கு எதிரானது அல்ல. ஏனென்றால் இருவரும் ஒரே மாதிரியான மக்கள் விரோதிகளே) 

எங்கள் பிரச்சனைகளை யாருமே கதைப்பதில்லை தானே? 

அதுதான். இந்த நபர்களுக்கு மக்கள் அனுபவிக்கும் நோய்களைப் பற்றியோ அதற்கான நிவாரணங்களைப் பற்றியோ எவ்விதக் கருத்துக்களும் கிடையாது. நோய்களை தீர்ப்பதற்கு எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை. 

அவர்கள் செய்வதெல்லாம் தங்களிடம் இருக்கும் பட்டியல்களை எங்களிடம் கொண்டு வந்து முன் வைப்பது மட்டுமே. அந்த பட்டியல்களை தயாரித்திருப்பது எங்களின் உரிமைகளை மென்மேலும் பறித்தெடுப்பதற்காகவே. அவர்களின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் பாதுகாத்து வைத்துக் கொள்ளுவதற்கே. இப்போதைய நாட்களில் மேடையேற்றப்படும்  நாடகங்களில் கொள்கைகள் பற்றி பேச்சுக்கே இடமில்லை. இவை யாவும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டம் மட்டுமே. 

இது ஒரு வகையில் ஒரு நாடகம் போன்றது தான்.

ஆம் இது ஒரு நாடகம் தான். இந்த நாடகங்களில் உண்மையான பிரச்சனைகள் மறந்து போய் மாயை உலகத்தில் தனிமைப்படுத்தப்படுவது மக்களே. இந்த நாடகத்தில் ஒரு முறை தியாகியாக ஜொலிப்பவன் மற்றமுறை  மக்கள் விரோதியாக வெளிப்படுகிறான். நேற்றைய மக்கள் விரோதி இன்று தியாகிறான்..

அன்று ரணிலின் மக்கள் விரோத செயல்பாடுகளை தோற்கடிப்போம் என மஹிந்தவை கொண்டு வந்தோம். அன்று வீரனாக தோன்றிய மஹிந்த பின் மக்கள் விரோதியாகினார். அன்று மக்கள் விரோதியாக தென்பட்ட ரணில் தற்போது தியாகியாக தென்படுகிறார். எங்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை இந்த நாடகங்களை பார்த்து அழுது அல்லது சிரித்துக் கொண்டு இருக்க மட்டுமே.

இவற்றை தொடந்தும் செய்து கொண்டிருக்க முடியாது. அதற்கு நீங்கள் தரும் மறுமொழி என்ன? 

நாங்கள் சொல்வது பாதிக்கப்பட்டிருக்கும்  நோயைப்பற்றியும் அதற்கான நிவாரணங்களைப் பற்றியுமே. இல்லாவிட்டால் முக்கிய கட்சிகள் இரண்டும் அதற்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளும் எங்களுக்கு ஏற்படுத்தியுள்ள நோய்களுக்கான  நிவாரணங்களைப் பற்றியே. தனி நபர் என்ற வகையில் அல்லாது சமூகம் என்ற வகையில் நாங்கள் உட்பட்டிருக்கும் பயங்கரமான நிலைமையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி இடதுசாரிகளோடு இணைவதே.

முன்பும் இடதுசாரிகள் என சொல்லிக் கொண்டு ஒவ்வொருவரும் வந்தனர். அவர்கள் செய்ததும் பழைமையான விடயங்களைத் தானே. 

அது உண்மை.  உங்களுக்கு அது பற்றி நம்பிக்கையீனம் காணப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி)  தங்களின் கொள்கைகளை கைவிட்டு காலத்திற்கு காலம் வீரர்களாகவும் மக்கள் விரோதிகளாகவும் ஒருவரோடு ஒருவர் இணைந்தனர். தங்களுக்கான வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு எந்தவொரு மோசமானவற்றையும் செய்கின்றனர். ஒடுக்கப்பட்டும், உழைக்கும் மனிதர்கள் பற்றி எவ்வித பொறுப்பும் இவர்களிடம் காணப்படவில்லை. ஒரு முறை  மஹிந்தவை விரட்டி மைத்ரியை கொண்டு வர வேண்டும் என்றனர். தற்போது மைத்ரி காட்டிக் கொடுக்கிறார் என்கின்றனர். எனவே இந்தக் கட்சிகளில் நம்பிக்கை வைக்க முடியாது. எங்களுக்கு இருக்கும் ஒரே வழி இடது சாரி அரசியலை பலப்படுத்துவதே. 

ஏன் நாம் இடது சாரி அரசியலை பலப்படுத்த வேண்டும்?

இடதுசாரி அரசியல் என்பது உழைக்கும், பாதிக்கப்பட்டுள்ள, உரிமைகள் பறிக்கப்பட்ட பொருளாதாரத்திலும் அரசியலிலும் இருந்து விரட்டப்பட்ட பாதிக்கப்பட்ட வர்க்கத்தின் சக்தியை வளர்த்தெடுப்பதாகும். 08 மணி நேர வேலை, ஓய்வூதிய சம்பளம், சமூக நலன்புரி சேவைகள் என்பனவற்றை மக்கள் போராட்டங்கள் மூலமாகவே வென்றெடுத்தனர்.

வலதுசாரி அரசியல் என்பது அதிகார போட்டி, யுத்தம் செய்வது, பிரபுத்துவம், இனத்துவேசம், உழைப்பை உறிஞ்சி எடுத்து கொள்ளை அடிப்பது என்பவைகளை அனுமதிக்கும் அரசியலாகும்.

இடதுசாரி அரசியல் என்பது சமத்துவம், சமவுரிமை

உழைக்கும் மக்களுக்கு அதன் பயனைப் பெற்றுக்கொடுப்பது அதாவது  உழைப்பு, மற்றவர்களை சுரண்டாமை, இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இருக்கும் உற்பத்திகளுக்குப் பதிலாக சமூக தேவைப்பாடுகளை முக்கியப்படுத்தும் உற்பத்திகளை தோற்றுவித்தல் முதலிய விடயங்களாகும். மேலும் அரச அதிகாரம் தனிநபருக்கு அல்லது ஒரு தனிப்பட்ட கூட்டத்தினருக்கு அல்லது பொதுவாக மக்களின் கைகளுக்கு கொண்டு செல்வது மற்றும்  தங்களின் வாழ்க்கை சம்பந்தமான முடிவுகள் தங்களாலேயே தீர்மானிக்கப்படக்கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டியுள்ளது. 

நபர்களுக்கு அல்லாது மக்களுக்கே அதிகாரம் வழங்கும் அரசியல் அமைப்பு திட்டம் எங்களிடம் உள்ளது. தேசிய பிரச்சனைகளில் சாதி, இனம், சமய வேறுபாடுகள் அற்ற சகலரதும் சமமான உரிமைகளை ஏற்றுக்கொள்வது, வெளிநாட்டுக்கொள்கைகள் சம்பந்தமாக அமெரிக்கா அல்லது சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாது சரியான ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கொள்கைகள் போன்ற இலக்குகளையும், மற்றும் அத்தியாவசியமான புனர்நிருமாணங்களை வென்றெடுக்கும் வழிவகைகள் சம்பந்தமாக நீங்கள் விரும்பினால் எங்களுடன் மேலதிகமாக பேச்சுவார்த்தை நடத்த முடியும். 

நாம் முன்னிலை சோசலிச கட்சியை தெரிவு செய்ய வேண்டியது ஏன்? 

இந்த தேர்தலில் மக்களின் விருப்பத்தை வென்றெடுப்பது அதிகமாக பணத்தை  செலவு செய்யும் நபர்கள், குண்டர்களின் பலத்தை  கொண்டிருப்பவர்கன் ஊடகங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள் அரசின் பலத்தை தங்களின் கையில் வைத்திருக்கும் நபர்கள். அதனால் இடதுசாரிகளின் கொள்கைகளுக்கு மேற்கொள்ளப்பட யாரும் இடம் கொடுக்கமாட்டார்கள் என எமக்குத் தெரியும். இருந்த போதும் பிரச்சனைகளுக்கு தீர்வு இடதுசாரிகளின் கொள்கைகள் மட்டுமே. 

இந்த சீரழிவுகளில் உங்களையும் ஈடுபடுத்தாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் தெரிவு செய்ய வேண்டியது முன்னிலை சோசலிஸ கட்சியே. 

சர்வதேச ஆலோசர்கள், கீழ்த்தரமான வழிவகைகளுக்கு வழியமைத்துக் கொடுப்போர், அரச நிறுவனங்கள், ஊடகங்கள், வியாபார பதாதைகள், பெரும் முதலாளிகள், யாவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு மறைக்க முயலும் விடயங்களை  நாம் ஏற்கப் போவதில்லை. தொடர்ந்தும் ஏமாற மாட்டோம் என்பதை வெளிக்காட்டுவதற்கு  உங்களின் வாக்குகளை சம்மட்டிக்கு அளித்து அதாவது சம்மட்டிக்கு முன் புள்ளடி போட்டு வாக்களியுங்கள்.

எம் மக்களே!!.

சரியான வழி தெரியும் போது 

எமது பார்வை நன்கு தெரியும் போது

 நாம் ஏன் பிழையான 

வழிகளை தெரிவு செய்ய வேண்டும்?

பழைமையான முட்டாளத்தனங்களிற்கு செவிமடுக்காமல் புதிய முடிவுகளை எடுப்போம்!!!

சமத்துவ சமுதாயம் படைப்போம்!!!

முன்னிலை சோசலிச கட்சி