Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசாங்கம் பல்கலைக்கழக மாணவனை கடத்தியுள்ளது!

நேற்று (05)  சப்பரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவன் அரசாங்கத்தினால் கட்தப்பட்டுள்ளான். குறிப்பிட்ட மாணவன் வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் யோகாராஜா நிரோஜன் என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இம்மாணவன் பல்கலைக்கழகத்தில் மூண்றாம் ஆண்டில் கல்வி கற்பதாக அறியக்கிடைக்கின்றது.

நேற்று ( 05 ) 09-12 மணிவரை பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது  பரீட்சை அதிகாரியுடன் வந்த பொலிசார் இவரை கைது செய்துள்ளனர். இதை எதிர்த்து ஏன் அவரை கைது செய்தீர்கள் என்று கேட்ட மாணவர் சங்க தலைவர்களின் பல்கைலைக்கழக அடையாள அட்டையை பல்கலைக்கழக உயர் அதிகாரி பறித்து எடுத்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத  மாணவர்கள் சமனெலவெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று அந்த மாணவனின் பெயரைச் சொல்லி கேட்டுள்ளனர். அங்கு கடமையில் இருந்த அதிகாரி அவர் இங்கு இல்லை நீங்கள் அவரை இனி பார்க்கவே முடியாது. அவர் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரை விசாரிக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.
 
இதை அடுத்து இன்று (06) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த மாணவர்கள், ஊடகவியலாளர்களுடன் பொலிஸ் நிலையம் சென்ற போது கடமையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரி குறிப்பிட் மாணவன் இங்கு இல்லை என கூறியுள்ளதுடன் அவரை அவரது பெற்றோரைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதே போன்று கடந்த மூன்றாம் திகதி இதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவன் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
 
அரசாங்கம் இப்படியான செயற்பாடுகளை மேற்கொள்வது மீண்டுமொரு முறை பல்கலைகழகத்திற்குள்  இன முரண்பாடுகளை தோற்றுவித்து அதில் குளிர் காய்வதற்கேயாகும்.