Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை அரசுக்கு எதிரான பாரீஸ் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

இன்று வெள்ளி (6/2/2015)  மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரையும் பிரான்ஸ்  இலங்கை தூதராலயத்தின் முன்பான பாரீஸில் ஏற்க்கனவே அறிவித்திருந்தபடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த ஆட்சியில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் நாட்டுக்கு திரும்பி அரசியல் நடவடிக்கைகளில ஈடுபடும் உரிமை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனை உறுதி செய்வது இன்றைய அரசாங்கத்தின் மீதுள்ள கடமை என்பதனை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது.

இங்கு முழக்கப்பட்ட கோசங்கள்!

1. அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்க இடமளியோம்!

2. அரசியல் காரணங்கள் மீது புலம் பெயர்ந்தவர்களின் உரிமைகளை பறிக்காதே!

3. தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியலில் ஈடுபடும் உரிமையின் மீது கை வைக்காதே!

4. மக்களே, உரிமைகளை பாதுகாக்க அணிதிரள்வோம்!

5. ஜனநாயகம் அரசாங்கத்தின் நண்பர்களுக்கு மாத்திரமா?

6. சர்வாதிகாரி மஹிந்தரின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை பெற்றுக் கொடு!

7. சட்டத்தின் பெயரால் நடத்தும் அடக்குமுறைக்கு எதிர்ப்போம்!