Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

இங்கிலாந்து, இத்தாலியில் இலங்கை அரசிற்கு எதிரான ஆர்பாட்டங்கள் (வீடியோ & படங்கள்)

நேற்றைய தினம் 07/02/2015 இங்கிலாந்து லண்டன் நகரிலும் இத்தாலி மிலான் நகரத்திலும் இலங்கை உயர் ஸ்தானிகர் இல்லத்தின் முன்னால் கண்டன ஆர்பாட்டங்கள் நிகழ்ந்தன.

அண்மையில் மைத்திரி தலைமையில் பதவி ஏற்றிருக்கும் புதிய அரசு தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை காலதாமதமின்றி நடைமுறைபடுத்தக்கோரியும், கடந்த காலங்களில் இலங்கை அரசுகளின் அடக்குமுறை காரணமாக  அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணத்தாலும் மற்றும் மகிந்த பாசிச ஆட்சியில் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளிக்கும்படியும், தோழர் குமார் குணரத்தினத்திற்கு இலங்கை அரசியலில் ஈடுபடுவதற்கு உரிய உரிமையினை உறுதி செய்யும் படி கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

லண்டனில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மூவின மக்களும் கலந்து கொண்டதுடன் தமிழ், சிங்கள மொழிகளில் கோசங்கள் எழுப்பட்டமையும குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்!

லித் குகன் எங்கே? எங்கே?

புலம்பெயர்ந்தவர்கள் இலங்கை அரசியிலில் ஈடுபட உரிமை உண்டு!

தோழர் குமாரின் அரசியல் உரிமைகளை உறுதி செய்!

லண்டன் வீடியோ 1 (இங்கே அழுத்தவும்)

லண்டன் வீடியோ 2 (இங்கே அழுத்தவும்)

லண்டன் வீடியோ 3 (இங்கே அழுத்தவும்)

லண்டன் படங்கள்

மேலும் புகைப்படங்களுக்கு இங்கே அழுத்தவும்

இத்தாலி வீடியோ 1 (இங்கே அழுத்தவும்)

இத்தாலி படங்கள்