Wed04172024

Last updateSun, 19 Apr 2020 8am

கொழும்பில் தோழர் குமாரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: படங்கள்

தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்!, அவரின் சிவில் உரிமைகளை அங்கீகரி! ஆகிய கோசங்களை முன்வைத்து தற்சமயம் கொழும்பு கோட்டை புகையிரத நியைலயம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்காணோர் கலந்து கொண்டனர். அங்கு கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றிய துமிந்த நாகமுவ...

கடந்த காலங்களில் வாய் கிழிய ஜனநாயகம் பற்றி பேசிய அரசாங்கத்தின் ஜனநாயகம் இதுதான் வௌிநாட்டில் இருக்கும் மாற்று அரசியல் கருத்துடையவர்கள் வரலாம் இங்கு அவர்கள் அரசியல் செய்யலாம் என்று கூறியது. இப்போது அவர்கள் அதை செய்து காட்டி இருக்கிறார்கள். அவர்களது ஜனநாயகம் இதுதான் மாற்று அரசியல் செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதுதான் அதன் வெளிப்பாடு தோழர் குமார் குணரத்னத்தின் கைதும் அந்த வகையைச் சார்ந்ததுதான்.

இதனால்தான் நாங்கள் கூறுகின்றோம் இந்த ஆட்சியாளர்கள் எல்லோருமே ஒன்றுதான் இவர்களிடமிருந்து எந்தவித ஜனநாயக பண்புகளையும் எதிர்பார்க்க முடியாது. எனவேதான் தோழர் குமார் குணரத்னத்தின் விடுதலைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தோழர் குமாரின் சகோதரி உட்பட பலர் கருத்து தெரிவித்து குமார் குணரத்தினத்தை உடனடியாக விடுதலை செய்து அவரது அரசியல் செய்யும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.