Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

சத்தியாகக்கிரக போராட்டம் தொடர தடை இல்லை - கோட்டை நீதவான் தெரிவிப்பு

கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக கடந்த வெள்ளி 13/11/2015 முதல் நடைபெற்று வருகின்ற சத்தியாகக்கிரக போராட்டமானது பொதுமக்களிற்கும் புகையிர பயணிகளிற்கும் அசௌகரியத்தை உண்டு பண்ணுவதா தெரிவித்து கொழும்பு பொலீசாரால் வழக்கு ஒன்று நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குமார் குணரத்தினத்தின் சகோதரி உட்பட முன்னிலை சோசலிக கட்சி உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிய முன்னணியில் உள்ள அமைப்புகளின் தோழர்கள் என 18 பேர்களை நீதிமன்றில் அராஜாக அழைப்பானை பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னணியில் மைத்திரி - ரணில் அரசே செயற்பட்டது.

இன்று காலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கோட்டை நீதிமன்ற நீதிபதி,  ஜனநாயக வழிகளில் மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுவதனை தடைசெய்வதற்கு  சட்டத்தில் இடமில்லை என தெரிவித்ததுடன்; இந்த சத்தியாகக்கிரக போராட்டம் பொது மக்களிற்கு இடைஞ்சலை உண்டு பண்ணவில்லை என தெரிவித்ததுடன்; பொலீசாரால் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது போராட்டம் தொடர அனுமதியளித்துள்ளார்.