Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினம் அவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்திம் அவர்கள் இலங்கையில் சட்டத்திற்கு முரணாக நீண்ட காலம் தங்கி இருந்தமை காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 4ம் திகதி  நோயுற்றிருந்த தாயாரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வீடு வந்திருந்த வேளையில் கேகாலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றில் குடிவரவு விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 18ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படிருந்தார். 18ம் திகதி குடிவரவு திணைக்களத்தில் இருந்து எவரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்து  இருக்கவில்லை என்பதால் விளக்கமறியல் இன்றைய தினமான 27ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இன்று மேலும் இடுத்த மாதம் மார்கழி 11ம் திகதி வரை மேலும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

குமார் தனது இலங்கை குடியுரிமையினை மீள பெற விண்ணப்பித்திருப்பதும் அதற்க்கான பதிலை வழங்காது இழுத்தடிப்பதும் அனைவரும் அறிந்ததே. குமார் அவர்களின் குடியியல் உரிமையினை வலியுறுத்தியும், அவரை நாடு கடத்த கூடாது எனவும், அவரின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தக்கோரியும் நாடு தளுவிய பல போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.