Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயக உரிமைகள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான ஒரு பரந்த கூட்டணி உருவாக்கம்: பத்திரிகையாளர் சந்திப்பு

குமார் குணரத்தினத்தின் பிறப்புரிமையை அங்கீகரிக்கக் கோரியும், அவரின் அரசியல் உரிமைகளை வழங்கக் கோரியும் நேற்று (19.01.2016) பாரிய ஆர்பாட்டம் கொழும்பில் நடாத்தப்பட்டது. அவ் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, ரணில்-மைத்திரி அரசால் அதிரடிப்படை ஏவிவிடப்பட்டு வன்முறை பிரயோகிக்கப்பட்டது. இவ் வன்முறையினை கண்டித்தும், குமார் குணரட்ணத்தின் உரிமைகளை அங்கீகரித்து - அவரை விடுதலை செய்யக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரியும் இன்று பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நடாத்தப்பட்டது.

இப் பத்திரிகையாளர் மாநாட்டில் பெரும்பாலான அனைத்து இடதுசாரியக் கட்சிகளின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற்சங்க தலைவர்கள், கல்வியாளர்கள், வக்கீல்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஜனநாயக உரிமைகள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான ஒரு பரந்த கூட்டணி ஒன்றினை உருவாக்கும் அவசியத்தை அனைவரும் வலியுறுத்தியிருந்தனர்.