Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் எதிர்ப்பு போராட்டம்!

திங்கள் 25ம் திகதி காலை 10 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. சமவுரிமை இயக்கம் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. இப்போராட்டமானது சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற சகல காணாமல்லாக்கல்களையும் வெளிப்படுத்தக்கோரியும் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவுக்கு யாழ் வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் காணமல் போனவர்கள் அனைவரும் இறந்தவர்களாக  கருத வேண்டும் ஏனெனில் தம்மிடம் காணாமல்போனவர்கள் என்ற பட்டியலில் உள்ள ஒருவரும் கிடையாது என தெரிவித்துள்ளார்.  பல சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது. சிறைகளில் இருப்பவர்கள் குற்றவாளிகள் மட்டுமே எனவும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றார்.

அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை, அரசியல் கைதியாக அங்கீகரிக்க மறுப்பது என்பது இலங்கையில் இன முரண்பாடு என்ற ஒன்று இருக்கவில்லை என்று மறுப்பதாகும். இதன் மூலம் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக மாற்றுவது, கைதிகளின் குடும்பங்களின் நியாயமான போராட்டத்தை மறுப்பதாகும்.

இந்த ஆர்ப்பாட்ட எதிர்ப்பு போராட்டத்தில்; காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும்  மனித உரிமை செயற்பாட்டாளர்களும், அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.