Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களின் மேல் வரி அழுத்தம், எம்பிக்களுக்கு சம்பள அதிகரிப்பு!

அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்க்கான மாதாந்த சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதேவேளை சாதாரண மக்களின் அன்றாட தேவைகளிற்கான பொருட்களின் மேல் ஜரோப்பிய நாடுகளில் அறவிடும் வாற் (VAT) வரி இனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அறித்தல் வெளியிட்டுள்ளது. எந்த அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிக்கப்படவுள்ளது என்ற பட்டியல் இன்னமும் வெளிவரவில்லை. ஏற்க்கனவே தமது அன்றாட தின வாழ்வுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் மேல் விதிக்கப்படவுள்ள வரி என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அரச சலுகைகளை பெற்றுக் கொண்டு சுகபோக வாழ்வு வாழ்கின்றனர். அவர்களிற்க்கான மதாந்த சம்ளத்தை அதிகரிக்கும் அதே வேளை மக்களின் மேல் வரி சுமை ஏற்றப்படுகின்றது. முன்னிலை சோசலிச கடசி இதனை கண்டித்து ஊடகவியலாளர் கூட்டத்தினை கூட்டியிருந்தது.