Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

தொடர் எதிர்ப்புக்கு ஒரு வருடம் (படங்கள்)

கோட்டை புகையிரத நிலையத்தின் அருகே குமார் குணரத்தினத்தின் அரசியல் மற்றும் குடியியல் உரிமைகளிற்கான தொடர் போராட்டம் இன்று ஒரு வருடத்தினை நிறைவு செய்துள்ளது. இந்த நாளில் (13/11/2016) பிரதான இடதுசாரிய கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கலைஞர்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு தமது பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

முன்னிலை சோசலிசக் கட்சி ஜாகொட, தொழிற்சங்க கூட்டமைப்பு ஒன்றியம் லினஸ் ஜயதிலக்க, இலங்கை ஆசிரியர் சங்கம் ஜோசப் ஸ்டாலின், FMETU ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் விஸ்ரஸ்சன கன்னங்கர, டுனுஸ்கா ராஜபக்ஷ, கலைஞர்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் ஜனநாயகத்தை முன்னைய அரசு போல குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கையினை கண்டித்ததுடன் சுதந்திர ஊடகவியலுக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் இன்றைய ஆட்சியாளர்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் கண்டனத்திற்கு உள்ளாக்கினர்.