Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்தை மீண்டும் நாடு கடத்த முயற்சி?

சிறைச்சாலை உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிரேம்குமார் குணரத்னத்திற்கு நீதிமன்றினால் வழங்கிய சிறை தண்டனை எதிர் வரும் டிசம்பர் 9ந் திகதி பகல் 12.04 ற்கு முடிவுக்கு வருகிறது.

அதன் பிறகு அவரை இலங்கையில் வைத்துக்கொள்வதற்கு அல்லது நாடு கடத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்டவரால் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியுள்ளது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்தப் போவதாக கொடுத்த வாக்குறுதிக்கு அமைய முடிவை எடுப்பாரா அல்லது முன்னைய ஆட்சியாளர்கள் அனைவரையும் போல தேர்தலில் வெல்ல சொல்லப்பட்ட பொய் வாக்குறுதி தானா இது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இலங்கையில் இருக்கவிட வேண்டுமானால், அவரின் குடியுரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை எனின் அன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம்.

எதுவானாலும் அவரை நாடு கடத்துவதானால், சிறை வாசம் முடிவுக்கு வரும் முன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லுதல் வேண்டும். என்ற நிலைமையில் இன்னமும் அது அவ்வாறு நடக்கவில்லை.

குமார் குணரத்னத்தை சிறைபடுத்தலின் போது சாதாரண விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. சாதாரணமாக சிறை தண்டனைக்கு ஆளானவர்களை ஒரு வருடத்திற்கு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்துக்கொள்வது நடைமுறை. வேறு சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுப்பது முதலாவது வருட முடிவின் பின்பே. ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கிய உடனேயே குமார் குணரத்னத்தை அனுராதபுர சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் தலையீடு இருந்தது.

சிறைத்தண்டனை முடிவுக்கு வரும்போது என்ன நடக்கும் என்பது இன்னமும் ஆர்வமூட்டும் ஒன்றாகவே இருக்கிறது. 

குமார் குணரத்னத்திற்கு குடியுரிமை கேட்டு திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இங்கு குடியுரிமை இருந்து வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் வந்து அரசில் பலவித பதவிகள் வகிக்கும் காலத்தில், குமார் குணரத்னத்திற்கு வேறு விதமாக கவனிக்கப்படுகிறது. குடியுரிமை தொடர்பாக சட்டத்தில் உள்ள குடியுரிமை சட்டமூலத்திற்கு ஏற்ப, அவ்வாறு வெளிநாடு குடியுரிமை பெற்றவர்களாக இருந்து, மீண்டும் குடியுரிமை கேட்கும்போது குடியுரிமை சட்டமூலத்தின் 8வது சரத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது அமைச்சரின் அனுமதி வழங்கப்படவேண்டும்..

அதற்கான ஒரே நிபந்தனை, வேறு நாட்டில் பெற்றுக்கொண்ட குடியுரிமையை விடுவதற்கான விண்ணப்பதாரியின் விருப்பமேயாகும். குமார் குணரத்னத்திற்கு அவ்வாறு குடியுரிமை சட்டமூலத்தின் 8வது சரத்தின் கீழ் பாரம்பரிய குடியுரிமை தொடர்பாக உறுதிப்படுத்த கேட்ட சந்தர்ப்பங்கள் இரண்டாகும். ஆனால் அறிக்கைகளின் அடிப்படையில் அரசு அவ் விண்ணப்பக்கங்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.