Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரட்னத்தின் குடியுரிமை ஏற்றுக்கொள்! - கண்டியில் மௌன எதிர்ப்பு

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்திற்கு விதிக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு முரணான சிறைத்தண்டனை முடிய இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன. அவரின் இலங்கைக் குடியுரிமையை உறுதி செய்வதற்கு பதிலாக ஆட்சியாளர்கள் அவரை மீண்டும் நாடு கடத்த முடிவெடுத்துள்ளனர். இதனை கண்டித்தும், உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த ஜனநாயகத்தை நிலை நாட்டக்கோரியும் இன்று கண்டி நகரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மௌனப் போட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குமார் குணரட்னம் குடியுரிமையை ஏற்றுக்கொள்!

அனைத்து அரசியல் கைதிகளை விடுதலை செய!

காணாமல் போனோர், கடத்தல்ளை வெளிப்படுத்து!

ஜனநாயக விரோத சட்டங்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கு!!

என்ற கோஷங்களுடன் இந்த எதிர்ப்பு நடைபெற்றது.