Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாகக்கிரக போராட்டம்

கடந்த 2012ம் ஆண்டில் இருந்து பட்டதாரிகளிற்கு தொழில் வாய்ப்பை அரசு வழங்கத் தவறி உள்ளது. பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையின்றி எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்று காணப்படுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களை ஸ்த்தாபித்து ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மூலம் தமக்கு வேலை வழங்கக்கோரி முன்னர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். 

அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை நம்பி தமது போராட்டங்களை இடை நிறுத்தி இருந்தனர். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ்ப்பாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாககிரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் கடந்த ஒன்பது நாட்'களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் நேற்றைய தினம் மாவட்ட செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலமாக சென்று தமது கொரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரினர். இதே போன்று இன்று மூன்றாவது நாளாக யாழ் மாவட்ட அரச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர். அம்பாறையிலும் அரச செயலகத்தின் முன்னால் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. 

போலிவாக்குறுதிகளுக்கு செவிசாய்க்கத்தயாரில்லை.  எல்லோருடைய ஆதரவுடனும் எம் போராட்டத்தை வலுவாக்குவோம் என்ற உறுதியுடன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றனர்.