Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர் போராட்டத்திற்கு ஜனாதிபதியின் தீர்வு போராடுவோர் மீது தாக்குவது தான்!

மக்களின் அடிப்படை உரிமைகளில் முக்கியமான இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவையினை  உலக வங்கி மற்றும் IMF இன் திட்டத்திற்கு அமைய படிப்படியாக காசுக்கு  விற்பனை செய்ய முயலும் செயற்பாட்டின் ஒரு வெளிப்பாடே சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி. சயிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக இழுத்து மூடக்கோரி இன்று (13-03-2017) கொழும்பில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

மாலபே போலி பட்டக்கடையை இழுத்து மூடு!.

போலித் தீர்வுகளை வேண்டாம்,  சயிட்டத்தை இழுத்து மூடு! 

கல்வி 6% ஒதுக்கீடு  வழங்கு!

பல்கலைக்கழக சேர்க்கை அளவை அதிகரி!

ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்இ மருத்துவ பீட மாணவர்கள் 'நடவடிக்கைக் குழுஇ பல்கலைக்கழக கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இன்றைய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

 இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவையினை உறுதி செய்வோம்! என முழங்கியவாறு மாணவர்களின் பேரணி கோட்டை புகையிரத நிலையத்தை அடைந்த போது ஊர்வலத்திற்கு எதிரான நீதிமன்ற தடை  த்தரவினை காட்டி  பொலிஸார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதனை பொருட்படுத்தாது மாணவர்களின் பேரணி முன்னேறி ஜனாதிபதி மாளிகையினை நோக்கி முன்னேறிச் சென்றது. ஜனாதிபதி மாளிகை அருகே பொலிஸார் வீதித் தடையினை ஏற்படுத்தி பேரணி முன்னேறிச் செல்லாத வண்ணம் தடுத்து நிறுத்தினர்.

இங்கு மாணவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் மீது  கடுகு புகை  மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் கலைந்து செல்லாது தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர். அங்கு வந்த விசேட அதிரடிப்படை, மாணவர்கள் மீது தடியடி  தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர். பல மாணவர்கள் பலத்த அடி காயங்களிற்கு உள்ளாகியதுடன் சிலர் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.