Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்பு

கிளிநொச்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் இன்று சமவுரிமை இயக்கம் பங்குபற்றி தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான யூட் சில்வா புள்ளே அவர்களின் தலைமையில் போராட்ட கொட்டிலுக்க வருகை தந்த சமவுரிமை இயக்கத்தினர் தமது ஆதரவினை தெரிவித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். 

சரணடைந்தும், கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளின் இந்த போராட்டத்தை நாடு தளுவிய அளவில் முன்னெடுக்க சமவுரிமை இயக்கம் அனைத்து உதவிகளையும் செயற்பாடுகளையும் வழங்கி போராட்டத்தில் சேர்ந்து நிற்கும் என என போராடும் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. 

கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு, வசாவிளான், வவுனியா மற்றும் திருகோணமலையில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பறிக்கப்பட்ட காணிகள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களிற்கான போராட்டங்களை நாடுதளுவிய ரீதியில் பரவல் படுத்தும் நோக்கில் பிரச்சார மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சமவுரிமை இயக்கம் முடிவெடுத்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள், தங்களால் முடிந்த நிதி உதவியளித்து சமவுரிமை இயக்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல உதவி செய்யுங்கள் என தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம். நிதி சேகரிப்பில் ஈடுபடும் சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்களிடம் தங்கள் பங்களிப்பினை வழங்கி இந்த போராட்டம் வெற்றி அடைய உதவுங்கள் என சமவுரிமை இயக்கம் வேண்டி நிற்கின்றது. 

சமவுரிமை இயக்கம் - ஜரோப்பிய கிளை