Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

தங்களது நிலத்திற்காக போராடும் கேப்பாபுலவு மக்களுடன் சமவுரிமை இயக்கம்

முல்லைத்தீவில் அரசியல் கைதிகள் விடுதலை கோரியும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை கண்டு அடைய கோரியும், அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள வழங்கக்கோரியும் பல நாட்களாக இடம்பெற்று கொண்டிருக்கும் சத்தியாகிரக போராட்டங்களில் இன்று (07/04/2017) சமவுரிமை இயக்கத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கி இருந்தனர்.

பல தலைமுறையாக விவசாயம் மற்றும் மீன் பிடித்தலை தொழிலாக மேற்கொண்டு கேப்பாபுலவில் வாழ்ந்த மக்கள் 2008ம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர நேர்ந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கேப்பாபுலவு மக்களின் குடியிருப்பு நிலங்கள், கோயில், தேவாலயம் மற்றும் பாடசாலைகளில் ராணுவத்தினர் முகாம் அமைத்து இருக்கின்றனர். அதி உயர்பாதுகாப்பு பகுதி என்று கூறி இன்று வரை பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடியிருப்பு காணிகள், விவாசய நிலங்களை ராணுவம் அபகரித்து வைத்துக் கொண்டிருப்பதால் இந்த மக்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்வதுடன் தொழில் ஆதாரத்தையும் இழந்து போயுள்ளனர். 

இந்த பகுதியை சேர்ந்த 132 குடும்பங்கள் கடந்த இரு மாதங்களாக தமது நிலங்களை மீள கையளிக்குமாறு கோரி தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் இந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது மௌனம் சாதிக்கின்றது. சமவுரிமை இயக்கம் கேப்பாபுலவு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கான போராட்டங்களிற்கு ஆதரவழித்து இந்த போராட்டங்களில் கலந்து வருவதுடன் இந்த போராட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இதனைவிட இன்னுமொரு மேலான நிலைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என கருதுகின்றது.

தொடர்பான ஏனைய பதிவுகள்

1.போராடும் மக்களுக்கு சம உரிமை இயக்கம் பூரண ஆதரவு!

2. காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்பு

3. கிளிநொச்சி மக்கள் போராட்டங்களில் சமவுரிமை இயக்கம் பங்கேற்பு

4. சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில்இ கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம்