Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இன மற்றும் வர்க்க முரண்பாட்டினால் பலியானவர்களின் நினைவுதினமாக, சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை முன்னிறுத்துவோம்!

 ஆளும் வர்க்க வரலாறுகளே மனித வரலாறாகி இருப்பது போல், இன முரண்பாட்டுக் காலத்தில் ஒடுக்கியோர் போற்றப்படுவதே வரலாறாகி வருகின்றது. ஒடுக்கியவர்கள் போற்றப்படுவதோடு, அந்த ஒடுக்கியவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படுகின்றனர்.

ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்புகள், தங்கள் அமைப்பையும் முன்னிறுத்தி நினைவுகளைக் கொண்டாடுவதே நடந்து வருகின்றது. அதேநேரம் தங்கள் அரசியலை முன்னிறுத்தி அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் பொதுவான நினைவுகளை மறுப்பதும் நடந்து வருகின்றது. ஒடுக்கப்பட்டவர்களின் நினைவை மறுப்பது என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் மனிதவுரிமையை மறுக்கும் அரசியலாக இருக்கின்றது.

ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் மூலமே, ஒடுக்கப்பட்டவர்களின் தியாகங்களை முன்னிறுத்த முடியும். இந்த வகையில் சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை ஒடுக்கப்பட்டவர்களின் தினமாக முன்னிறுத்துமாறு, சமவுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. சர்வதேச மனிதவுரிமைத் தினமான மார்கழி 10 திகதியை முன்வைத்து 10.12.2017 பாரிசில் ஒடுக்கப்பட்டோர் நினைவுநாளை நடத்த சமவுரிமை இயக்கம் அழைப்பை விடுகின்றது.

யார் ஒடுக்கப்பட்டவர்கள்? 

இனமுரண்பாட்டினால் பலியானவர்களில் ஒடுக்கியோரும், ஒடுக்கும் அரசியலைக் கொண்டு இருந்தோரும் அடங்கும். ஒடுக்கியவர்கள் பலியானதால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. இந்த வகையில் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கு பலியானவர்களையும் முன்னிறுத்துவோம்.  உதாரணமாக யார் ஒடுக்கப்பட்டவர்கள்?   

 

1) இலங்கையில் வட கிழக்கில் யுத்தத்தின் போது பலியான பொதுமக்கள்

2) மானிட விடுதலைக்கான போராட்டம் என்கிற நம்பிக்கையுடன் போராடி மரணித்த போராளிகள்

3) கடத்தப்பட்டு கட்டாயப்படுத்தி யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுப் பலியானவர்கள்

4) ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்டவர்கள்

5) பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொண்டிருந்ததால் கொல்லப்பட்டவர்கள்

6) மாற்று அமைப்பு உறுப்பினர்களாக இருந்ததால் கொல்லப்பட்டவர்கள்

7) சமூக விரோதி என்று கூறி வீதியோரங்களில் மின் கம்பத் தண்டனையால் கொல்லப்பட்டவர்கள்

8) விலைமாது என முத்திரை குத்தி கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர்கள்

9) துரோகிகள் எனப் பட்டம் சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள்

10) பயங்கரவாதிகள் எனக் கூறிக் கொல்லப்பட்டவர்கள்

11) சிங்களவர் என்பதால் கொல்லப்பட்டவர்கள்

12) முஸ்லிம் என்பதால் கொல்லப்பட்டவர்கள்

13) இனச் சுத்திகரிப்பு திட்டத்தின் கீழ் கொல்லப்பட்டவர்கள்

14) தமிழர் என்பதால் கொல்லப்பட்டவர்கள்

15) பணத்திற்காக கொல்லப்பட்டவர்கள்

16) இனக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள்

17) சிறைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் கொல்லப்பட்டவர்கள்

18) அரச கூலிப் படைகளினால் கொல்லப்பட்டவர்கள்

19) பாலியல் வன்முறையால் கொல்லப்பட்டவர்கள்

20) சாதி ஆதிக்கத்தால் கொல்லப்பட்டவர்கள்

21) இது போன்று கொல்லப்பட்ட பொது மக்கள்   

இப்படிக் கொல்லப்பட்டவர்களே ஒடுக்கப்பட்டவர்களாகவும், இதைச் செய்தவர்கள் ஒடுக்கும் தரப்புமாகும். இனமுரண்பாட்டை வர்க்க முரண்பாட்டை முன்னிறுத்தியே இவை எல்லாம் நடந்தேறியது. இப்படி ஒடுக்கப்பட்ட அனைவரையும் முன்னிறுத்தி, மனிதவுரிமை தினத்தை ஒடுக்கப்பட்டவர் நினைவுக்கான நாளாக முன்னிறுத்துவோம்! ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை, மானிட விடுதலைக்கான வழிகாட்டியாகக் கொள்வோம்.  

சம உரிமை இயக்கம் - பிரான்ஸ்

 

ජාත්‍යන්තර මානව හිමිකම් දිනය,ශ්‍රි ලOකාවේ වාර්ගික ගැටුම්          සමයේ මරා දැමු සියලු දෙනා සැමරිමේ දිනය ලෙස ප්‍රකාශයට පත්  කරමු

මානව ඉතිහාසය පුරාම,පාලකයා නොහොත් පිඩකයා ඔවුන්ගේ ප්‍රථිරුපය උත්කර්ෂවත් කර අලOකාර කර ඉතිහාසය ලෙස පෙන්වා ඇත.මේ ආකාරයෙන්ම යුධ ජයග්‍රාහන ලෙස උත්කර්ෂවත් කර වීරයන් ලෙස පෙන්වන්නේ මේකී පිඩක පාලකයින්ය.

යුද්දයේ දී මියගිය සහා ඉන් පිඩාවට ලක්වුවන් තවමත් යුධ වින්දිතයන් ලෙස,මෙම පාලකයන් පිලිගන්නේ නැත.මෙය නිසැකවම මානව හිමිකම් උල්ලOඝනය කිරිමකි.

අපි(පිඩිතයින්) දේශපාලනික වශයෙන් සවිඤ්ඤානික විමෙන් සහා ඒ අනුව ක්‍රියා කිරිමෙන් පමණක්,යුධ වින්දිතයින්ට සාධාරනය ඉටුකල හැක.

සම අයිතිය ව්‍යපාරය විසින් පවත්වනු ලබන,යුධ වින්දිතයින් සිහිකිරිමේ දිනය වන,දෙසැම්බර් 10 වෙනි දින පවත්වනු ලබන ජනහමුවට,ඔබටද මෙයින් ආරාධනා කරන්නෙමු.

යුධ වින්දිතයන් ලෙස සලකනු ලබන්නන්

 

1.සිවිල් යුධ සමයේ මරාදැමු උතුර සහ නැගෙනහිර ජනතාව.

2.මිනිස් නිදහස වෙනුවෙන් සටන් කර මියගිය අය.

3.බලහත්කාරයෙන් බදවා ගැනීම හේතුවෙන්,සටන්වලදි මියගිය අය.

4.ප්‍රජාතන්ත්‍රවාදය වෙනුවෙන් හඩ නැගු අය.

5.වාමාOසික අදහස් දැරු අය.

6.වෙනත් සOවිධාන වලට අයත්විම නිසා.

7.පාවාදුන් අය වශයෙන් නම්කර මරා දමා,වීදි ලාම්පුවල එල්ලා තැබු අය.

8.ගනිකාවන් වශයෙන් හැදින්වු අය සහ එසේ හැසිරුන අය.

9.ත්‍රස්තවාදින් හැටියට නම්කර මරා දැමු අය.

10.සිOහල ජනවර්ගයට අයත්වීම නිසා මරා දැමු අය.

11. මුස්ලිම් ජනවර්ගයට අයත්වීම නිසා මරා දැමු අය.

12.වාර්ගික සුද්ද කරනයට ලක්වී මිය ගිය අය.

13.මුදල් ලබා ගැනිම සදහා මරා දැමු අය.

14.දෙමළ ජනවර්ගයට අයත්විම නිසා මරා දැමු අය.

15.වාර්ගික කැරලි හේතුවෙන් මරා දැමු අය.

16.සිරගෙවල් තුලදී සහ වධකාගාර තුලදී මරා දැමු අය.

17.රාජ්‍ය අනුග්‍රහය ලද මැරකල්ලි විසින් මරා දැමුවන්.

18.ලිOගික අතවරයන්ට ලක්කර මරා දැමුවන්.

19.කුලය නිසා මරා දැමුවන්.

20.වෙනත් හේතුන් නිසාවෙන් මරාදැමු අය.

 

ඉහත සදහාන් ආකාරයට මරාදැමුවන්ගෙන සාතිශය බහුතරයක් පීඩිතයින් විය.එකල මේ සියලු ඝාතන වාර්ගික ගැටුමේ නාමයෙන් සිදුකෙරිනි.එම නිසා ලෝක මානව හිමිකම් දිනය ,ලාOකික පිඩිතයන්ගේ සැමරුම් දිනය ලෙස නම් කරමු.මානව වර්ගයාගේ නිදහස සදහා අප විසින් අනුගමනය කරනුයේ පීඩිත පන්තියේ  දේශපාලනයයි.

 

We declare the International Human Rights Day as the day of commemoration of those who were killed due to ethnic conflict in Sri Lanka

History of human kind has always been distorted and dictated for the favor of the rulers and oppressors. In such a way, history of the oppressors are portrayed as the history of the whole human kind over and over again. Similarly, the oppressors in Lanka are praised and appreciated for ending the long war in Lanka. The history dictated in this way with iron hand for the oppressors never leave any space for the oppressed.

The oppressors celebrate commemoration with sole purpose of promoting their own track of policies and state machineries. Clearly this is to suppress the oppressed.

Celeberation of the commemorations by the armed organisations only to promote their policy is still continuing. To promote their policies they deny the rights to celeberate the commemorations of the oppressed. Denying the commemorations of the oppressed is a policy of depriving the human rights of the oppressed.

Equal Rights Movement appeal to oppressed people to declare the International Human Rights Day as the common day of commemoration for oppressed people regardless of the political stand or organizations.

Equal Rights Movement declares therefore, 10th of December, the International Human Rights Day, as the day for commemoration for the oppresses people and invite all to participate in the event of commemoration on 10.12.2017.

Who is oppressed?

We are well aware that among those who were killed are also oppressors and those who followed oppressive politics. Oppressors only because of the reason that they were killed in this conflict cannot be considered as oppressed only for that context. Accordingly, we will highlight those who were killed due to all sort of oppressions.

 

 Example:-

 

1.  The people of North East who were the victims of the war.

2.  The combatants who thought and fought and died for the liberation of humanity.

3.  Those who were killed in combat due to the forced recruitment.

4.  Those who were killed due to their voice for democracy.

5.  Those who were killed for their leftist ideology.

6.  Those who were killed for their identity with another group.

7.  Those who were accused as social traitor and killed and exposed on the lamp post in the streets.

8.  Those who were accused and killed by stamping them as prostitutes.

9.  Those who were accused as traitors and executed.

10. Those who were accused as terrorists and executed

11. Those who were killed because they were Sinhalese.

12. Those who were killed because they were Muslims

13. Those who were killed by the act of ethnic cleansing

14. Those who were killed for money.

15. Those who were killed because they are Tamils

16. Those who were killed during the racial riots.

17. Those who were killed in prisons and torture camps.

18. Those who were killed by state sponsored para military squads

19. Those who were killed due to sexual violence. 

20. Those who were killed because of their caste

21. Those who were killed on some other accusations

Those who were killed and executed, mentioned in the above list, are oppressed and those who carried out the killings and execution are oppressors. All these killings and executions were carried out in the name of the ethnic conflict. So, we will declare the Human Rights Day as Day of commemoration of the Oppressed. 

Let us stand for the politics of oppressed in order for the liberation of humanity.

 

Movement for equal rights - France