Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையும் இனவாத பொறியிலிருந்து மீள்வதும்

காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலம் தொடர்பில் முன்னனி சோசலிச கட்சியின் நிலைப்பாடு.

காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலம் என்ற பெயரில், காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணை செய்வதற்கான சட்டமொன்று 2016 ஆகஸ்ட் 23-ம் திகதி சபாநாயகரின் கையெழுத்துடன் சட்டமாக்கப்பட்டது. இது 2016 மே மாதம் 24-ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, கெபினட் அனுமதியுடன் ஜூன் மாதம் 22-ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்த சட்டமூலமாகும். இதற்கான வாக்கெடுப்பானது ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் இனவாத அடிப்படையிலான பலமான எதிர்ப்புக்களின் மத்தியில் நடந்தது. அன்றைய தினமே சட்டமூலத்திற்காக வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும், அந்த விவாதம் தொடர்பான சட்டமுறையை அறிந்து கொள்வதற்கும் இன்னும் கால அவகாசம் தேவை என்பது எதிர்க்கட்சி அணியின் சில உறுப்பினர்களின் எண்ணமாக இருந்தது. எது எப்படி இருப்பினும் அரசாங்கத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியினரதும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினதும், எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் ஆதரவுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

காணாமலாக்கலும் கூட்டுப்படுகொலையும்

சட்டமூலமானது, சட்டமாக்கப்பட்டாலும் சமூகத்தில் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் கிழம்பிய வண்ணம் உள்ளன. காணாமல் போனவர்களின் பிரச்சினை இலங்கை சமூகத்தினரின் பிரச்சினையே. இலங்கை மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பான பிரச்சினையாக இருந்தாலும், நடைபெறுகின்ற விவாதங்களிடையில் உண்மை பிரச்சினைக்கு கிடைத்திருப்பது மிக சிறிய இடமே. கடந்த காலங்களில் அதிகமானவர்கள் பல்வேறு முறைகளில் காணாமல் போய் உள்ளார்கள். இந்த காணாமலாக்களில் அதிகமானவை அரசுக்கும், அரசாங்கத்திற்கும் எதிரான அரசியல் கருத்து உடையவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பலவந்தமாக காணாமாலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்பாட்டு குழுவின் (WGID) கருத்திற்கேற்ப, அவர்கள் கடமையாற்றியுள்ள 35 வருட வரலாற்றில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சம்பவங்களில் இரண்டாவதாக கூடுதலான எண்ணிக்கையில் பதிவாகி இருப்பது இலங்கையிலேயே. அவர்களால் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள, காணாமலாக்கல் சம்பவங்களின் எண்ணிக்கை 12,341 ஆகும். அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 6551, ஏனைய மூலாதாரங்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவங்கள் 40 ஏனைய சம்பவங்கள் 5750 ஆகும்.

கடந்த அரசாங்கத்தினால் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசர் மெக்ஷ்வல் பரணகமவின் தலைமையிலும், சுரங்ஜனா வித்யார்தன, மனோ ராமநாதன் ஆகியோரின் பங்குப்பற்றலுடன், காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணை செய்யும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையை 2015 ஆகஸ்டில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் 18476 மற்றும் யுத்தம் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 24000 மட்டில் இருக்கும் என கூறப்படுகிறது. செஞ்சிலுவை சங்கம் இவ்வருட ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 16,000 இற்கும் அதிகமே. அம்னெஸ்ட் நிறுவனத்தின் இவ் எண்ணிக்கை 20,000 அளவிலாகும். மேலும் 1971 காணாமல் போனவர்கள் தொகை 20,000 மற்றும் 1987, 1989-ம் காலப்பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொகை 60,000 இற்கும் மேலதிகமாகவே கணிக்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும், பல ஆயிரக்கணக்கானோர்; இக் காணாமலாக்கல்களுக்கும், கடத்தல்களுக்கும் இரையாகியுள்ளமை உறுதியே. இக்காணாமல் ஆக்குதல்களுக்கும், இரையானவர்களின் உறவினர்களுக்கும் நியாயத்தை வழங்க வேண்டியுள்ளது.

நீதியை நிலைநாட்டுவதில் முன்னுரிமை வழங்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடுவதற்கு ஒழிவு மறைவின்றிய நேர்மையான விசாரணை ஒன்று அவசியம். இருந்தாலும் நீதி நியாயத்தை நிலைநாட்ட, அவ்வாறான விசாரணை மட்டும் போதுமானதல்ல. இது தொடர்பான நீண்ட கால படிமுறையை பற்றி கலந்துரையாடுவதுடன், நாங்கள் குறைந்த பட்சம் விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம்.

ஆனால், நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்ட மூலகங்களினூடாக நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இச்சட்ட மூலகங்களின் நோக்கமானது, காணாமல் போனவர்கள் தொடர்பில் நீதியான விசாரணையை மேற்கொண்டு, தகவல்களை சமூகத்திற்கு வழங்குவதும் அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா? அவ்வாறு இல்லை எனின், இங்கு நடப்பது அரசியல் அதிகார விளையாட்டா? இக் கேள்விகளுக்கு விடைகள் தேடாமல், இந்நாட்களில் புதிய சட்டமூலம் தொடர்பாக முன்னெடுக்கும் வாத விவாதங்களில் பங்கேற்பதில் எவ்வித பயனும் இல்லை. இந்த விவாதங்களில் இச்சட்ட மூலமானது ஜனநாயக உரிமைகளின் பாரிய வெற்றியாக அரசாங்கம் கொண்டாடும் போது, கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் செயற்படும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரிவினர், இது இராணுவ வீரர்களை வேட்டையாடும் முயற்சி எனக் கூறி இனவாத அரசியல் இயக்கத்தை வலுவூட்டுவதற்கு முயற்சித்த வண்ணம் உள்ளனர். இதை அவதானமாக கவனிப்போமாகில், தெரிய வருவது இவ் இரு பிரிவினரும் ஈடுபட்டிருப்பது, சமூகம் தொடர்பாகவோ, குற்றம் இழைத்தவர்கள்; தொடர்பாகவோ அல்ல. தமது பொறுப்பற்ற, குறுகிய அரசியல் போட்டிக்காகவே.

இனவாத இயக்கம்

கூட்டு எதிர்க்கட்சி இச்சட்ட மூலம் படையினரை வேட்டையாடல் என கூறுகிறது. அவர்களின் இந்த தர்க்கத்திற்கு ஏற்ப, காணாமல் ஆக்கல்களின் பின் புலத்தில் பாதுகாப்பு பிரிவினர் இருப்பதாகவும் காணாமல் ஆக்கல்களின் தொடர்பில் செய்யப்படும் எந்தவொரு விசாரணையிலும் பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச அதிகாரிகள் குற்றவாளிகளாகக்கூடும் எனவும், மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இக் குழுவினர் கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள். சமீபகால காணாமல் ஆக்கல்கள் அவர்கள் ஆட்சியில் இருந்த போது நடந்தவையாகும் என்பதால், அவர்களின் இந்த கூற்று பாரதூரமானது என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இந்த காணாமலாக்கத்திற்கு பின்னால் இருப்பது அரச இயந்திரம் என்பதும், இச் சம்பவங்கள் அரச அதிகாரிகளின் சுய விருப்பின் பேரில் நடந்தவை அல்ல என்பதும், அரசியல் அதிகார சபையின் விளக்கத்துடனும், கட்டளையின் பேரிலும் நடந்தேறியவை என்பது இக்கூற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. அப்படியானால், பாதுகாப்பு பிரிவினர் அல்லது வேறு அரச அதிகாரிகளுக்கு- விசேடமாக கடை நிலை அதிகாரிகள் அல்லாத, அது தொடர்பாக கட்டளை இட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரமிக்கவர்கள் மீது, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வேறுவிதத்தில் ஏதாவது குற்றம் நடந்திருப்பின், அதை செய்த நபரின் தொழில், அதாவது அவர் இராணுவத்தில் சேவை புரிகின்றாரா என்பதை விசேடமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இராணுவ அதிகாரிகளுக்கு, நாட்டின் சாதாரண சட்டத்திற்கு புறம்பாக குற்றம் இளைக்கவும் மற்றும் அதற்கான தண்டணை கிடைக்காமல் இருக்கவும், விசேட சலுகை உண்டு என்பது கூட்டு எதிர்க்கட்சியின் தர்க்கமாகும். ஆனால் இது பலவீனமானதொரு தர்க்கமாகும். அத்தோடு விழுமியம் சார்ந்த சமூகத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயக விரோத மற்றும் மானிட விரோத தர்க்கமாகும். இதன் பிரகாரம் தெளிவாவது என்னவென்றால், இவர்கள் இப்பிரச்சினையை பாவிப்பது தமது அதிகாரத்திற்காக, இனவாதத்தை விதைத்து அதனூடாக அதிகார இயக்கத்தை கைப்பற்றிக்கொள்ளவே. இது, கடந்த காலங்;களில் நடந்த சகல மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கும், சகல அரச அடக்கு முறைகளுக்கும் மற்றும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவுள்ள மார்க்கங்களை மூடி விடும். எனவே இனவாத தீயை வளர்க்கும் கீழ்தரமான அரசியல் தோற்கடிக்கப்படல் வேண்டும்.

கண்காட்சி அரசியல்

மறுபுறத்தில் இங்கு அரசாங்கம் ஈடுபட்டிருக்கும் அரசியலின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் காணாமல் போனவர்களுக்கான விசாரணையை செய்வதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் அதேவேளை, அரசாங்கத்தில் உள்ளவர்கள், ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இச்சட்டமூலத்தை கொண்டு வரும்போது, காணாமல் போனவர்களுக்கான நியாயத்தை நிலைநாட்டுவதும், உண்மையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுமே தமது அபிப்பிராயமாகும் என அரசாங்கம் சமூகத்திற்கு கூறியது. ஆனால் இவ்வருடம் மே மாதம் 24-ம் திகதி இந்த வரைபுச் சட்டமூலத்திற்கு அனுமதி கேட்டு, இரண்டு பக்க அமைச்சுப் பத்திரம் ஒன்றை முன்வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த அமைச்சு பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது என்ன? “காணாமல் போனவர்கள் தொடர்பாக காரியாலயத்தின் மூலம் வெளிக்கொண்டு வரும் தகவல்களில் எவ்வித சாதாரணமோ, அநீதியையோ பொறுப்பேற்கப்பட மாட்டாது.” என அந்த பிரேரணையின் கடைசி பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் நோக்கம் காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டு வருதலும், அவர்களுக்கு நட்டஈடு அல்லது வேறு ஆறுதலோ அல்லது ஒத்துழைப்போ வழங்குவது மட்டுமே என அந்த அமைச்சுப் பத்திரத்தில் பிரதமரின் கையெழுத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டமூல வரைபு தொடர்பான வாக்கெடுப்பில், கடந்த ஆகஸ்ட் 11-ம் திகதி பாராளுமன்றில் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, இதன் நோக்கம் அரச படையினரின் நற்பெயரை பாதுகாத்து, பாதுகாப்பு பிரிவினரை குற்றச்சாட்டிலிருந்;து விடுவிப்பதே என்று கூறினார்.

முப்படைகளை பாதுகாப்பதுடன், சர்வதேச ரீதியில் அவர்களின் நற்பெயரை கட்டியெழுப்புவதும் இதன் மூலம் நடக்கவிருக்கிறது. இராணுவம் சர்வதேசத்திற்கு செல்லக்கூடிய வகையில சமாதானப் படைகளில் இணையக்கூடிய நிலையை உருவாக்குவோம் என அமைச்சர் மங்கள சமரவீர கூறுகின்றார்.

காணாமல் போனவர்கள் சம்பந்தமாக விசாரணை செய்யும் கட்டமைப்புக்காக, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை பங்கெடுக்க செய்யாமை சம்பந்தமாக, தமது விசனத்தை தெரிவித்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஜனநாயக இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் வெளிநாட்டமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதிய ஒரு கிழமைக்குள், அரசாங்கத்தினால் இச்சட்டமூலத்திற்காக அமைச்சரவை அனுமதி கொடுக்கப்பட்டது.

எவ்வித கருத்துக்கணிப்புச் செயற்பாடுகளும் இன்றி, இவ்வாறான காரியாலயம் ஒன்று ஸ்தாபிப்பது அனுமதிக்க முடியாத செயலொன்றாக இனங்காணும் அவர்கள், யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளானவர்கள் அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களை சம்பந்தப்படுத்தாமை மூலம், அரசாங்கம் நியாயத்தை வழங்க நேர்மையான அர்ப்பணிப்புடன் இயங்கவில்லை என்பதை வெளிக்காட்டியுள்ளது என கருதுகின்றனர். இச் சட்டமூலத்தை கொண்டு வந்து அரசியல் கண்காட்சியாக்கி, நியாயம் வழங்கப்படும் என்ற போலியான எதிர்ப்பார்புக்களை ஏற்படுத்தி காணாமல் போனவர்களின் உறவினர்களை ஏமாற்றும் செயற்பாடாகும். அரசாங்கம், ஜனநாயக அபிலாஷைகள் கொண்ட குழுக்களுக்கு ஒன்றையும், இனவாத குழுக்களுக்கு அதற்கு முற்றிலும் வேறுப்பட்டதொன்றையும் கூறும் இரட்டை போக்கை வெளிப்படுத்தி உள்ளது.

முன்னமே செய்ய வேண்டியது

அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அடக்குமுறைக்கு பலியாயனவர்களுக்கும் நியாயத்தை வழங்கும் நேர்மையான முயற்சி இருப்பின் அதனை இதற்கு முன் பல்வேறு சந்தர்ப்பங்களில்; செய்திருக்கலாம். உதாரணமாக - காணாமல் போனவர்கள் சம்பந்தமாக இவ்வாறு அவசரப்படும் அரசாங்கம் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான கொள்கையை கடைப்பிடிக்;கின்றது. அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் இலங்கை ஜனநாயகத்தின் பிரதான பிரச்சினையாகும். சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சமூகத்தின் கருத்துக்களை கொண்டு தமது வாக்குகளை அதிகரித்துக்கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும்; பயன்படுத்திக்கொண்ட இவ்வரசாங்க தலைவர்கள்; ஆட்சிக்கு வந்த பின் அரசியல் கைதிகள் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துக்களை கூறி வருகின்றனர். ஜனாதிபதியும் பிரதமரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என கூறி வருகின்றனர். அரசியல் கைதிகளுக்கு நியாயத்தை வழங்குவது குறித்து எவ்வாறு இருப்பினும், அரசியல் கைதிகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கம் இப்பிரச்சினையின் ஓர் அங்கமான காணாமல் போனவர்கள் தொடர்பில் நியாயத்தை வழங்குவார்கள் என எதிர்ப்பார்ப்பதில் யதார்த்தம் இல்லை. அடுத்தாக வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரித்தது தொடர்பான பிரச்சினை, இராணுவமயமாக்கல் பிரச்சினை போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமல் அரைகுறையாக தீர்வு யோசனைகளை முன்வைத்திருக்கும் அரசாங்கம் குறைந்த பட்சம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு என்ன செய்துள்ளார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அதனால் இச்சட்ட மூலங்கள் மூலம் நீதி, நியாயத்தை எதிர்பார்ப்பது ஆமைகளின் சிறகை ஏதிர்பார்ர்ப்பது போன்ற விடயமாகும்.

சாதாரண சட்டமும் விசேட சட்டமும்.

அரசாங்கம் காணாமலாக்கல் தொடர்பில் நியாயத்தை வழங்க நினைக்குமானால் புதிய சட்டம், புதிய கட்டமைப்பு உருவாக்குவதற்கு முன் தற்போதிருக்கும் சட்டம், கட்டமைப்பு அவற்றின் உச்ச எல்லைவரை விஸ்தரிக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் இவ் அரசாங்கம் தொடர்பாக உள்ள அனுபவம் என்னவெனில் நடைமுறையில் உள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக குற்றங்களை மறைப்பதற்கான பங்கேற்பாகும். இதற்கான உதாரணங்களை வேண்டிய அளவுக்கு முன்வைக்கலாம்.

மேலும் கட்சி என்ற வகையில் எமக்கு ஒரு சொந்த அனுபவம் உண்டு. 2012 ஏப்ரல் 07ம் திகதி சகோதரர் குமார் குணரத்தினம் மற்றும் சகோதரி திமுது ஆட்டியகல கடத்தப்பட்டது, தமது அனுசரணையுடனும் பணிப்பின் பெயரிலும் என்று அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ 2015 இல் நவம்பர் 08ஆம் திகதி ஞாயிறு சத்ஹன்ட பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். காணாமல் ஆக்கள் தொடர்பில் தமக்கு தகவல்கள் தெரியும் என்றும், தான் அதில் சம்பந்தப்பட்டவர் என்றும் நபர் ஒருவர் பகிரங்கமாக கூறியிருந்தும், பொலீஸோ அல்லது வேறு அரச நிறுவனங்களோ இதற்கு எதிராக செயற்படவில்லை. இதற்கு புதிய சட்டமோ காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் காரியாலயமோ தேவையில்லை. நடைமுறையிலுள்ள சட்டம் போதுமானது. இருந்தாலும் முன்னிலை சோஷலிச கட்சி இது தொடர்பாக 2011 நவம்பர் 11 பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததோடு, அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று 2015 டிசம்பர் 03 ஆம் திகதி மீண்டும் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்தது. அதன்பிறகும் பொலிஸ் தனது கடமையை செய்யவில்லை என்பதற்காக 2016 ஜனவரி 07 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்தது. ஆனால், இதுவரைக்கும் அரச நிறுவனங்கள் இக்கடத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டத்தின் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை.

இன்னுமொரு உதாரணம் தான் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் சகோதரர்கள் இருவரும் 2011 டிசம்பர் 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல். இவர்கள் இருவரின் காணாமல் போதல் தொடர்பான தகவல்கள் கடந்த அரசின் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்;ல மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோரிடம் இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சி 2015 செப்டெம்பர் 10 ஆம் திகதி மற்றும் 2016 ஜனவரி 05 ஆம் திகதி குற்றப்புலணாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்த போதும் குறைந்த பட்சம் அது தொடர்பாக சிறு விசாரணைகள் கூட மேற்கொள்ளவில்லை.

இதனிடையே 2016 மே மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னால் கெபினட் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல சாட்சியமளிக்கையில் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போதல் சம்பந்தமான தகவல்கள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சு அறிந்திருந்ததாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சு உயர் அதிகாரிகளை அழைத்து காணாமல் போதல் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளுமாறு 2016 ஆகஸ்ட் 04 ஆம் திகதி குற்றப்புலணாய்வுத் திணைக்களத்திற்கு மீண்டும் முறைப்பாடு செய்திருந்த போதும் அது தொடர்பாக எவ்வித சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஊடகவியலாளர் பிரகித் எக்நெலிகொட காணமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையில் குற்றவாளிகளுக்கு அரச நிதியிலிருந்து நிதி உதவி வழங்குவதற்கு இவ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததென்பதை ஞாபகப்படுத்திக்கொள்வது முக்கியமானது.

காணமல் ஆக்கல் தொடர்பாக சாதாரண சட்டத்தின் கீழ் இலகுவாக செய்யக்கூடிய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலைமையிலேயே, இந்த அரசாங்கம் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்ய புதிய சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது.; இந்த செயற்பாட்டின் நேர்மை தொடர்பாக தெளிவான சந்தேகம் உள்ளது. காணாமல் போனோர் தொடர்பில் நியாயம் வழங்கவும் விசாரணை செய்யவும், குற்றவியல் சட்டம் போன்ற சாதாரண சட்டம், பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் இருப்பதோடு மேலதிகமான விசேட நிறுவனங்களும் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மனோ தித்தவெல்ல செயலாளராக கடமையாற்றும் புரிந்துணர்வு கட்டமைப்பு இணைப்பு செயலாளர் காரியாலயத்தைக் குறிப்பிடலாம். உண்மை, நீதி, புரிந்துணர்வு மற்றும் மீண்டும் சண்டை ஏற்படுவதை தடுப்பதற்கான காரியாலயம், நீதிமன்றக் கட்டமைப்பு காரியாலயம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்;டவர்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கான காரியாலயத்தை நடாத்திச் செல்லுதல் போன்ற பொறுப்புகள் அதற்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறியதும் இவ் அரசாங்கமே. அப்படியானால் மீண்டும் காரியாலய கட்டமைப்பு ஸ்தாபிப்பதன் நோக்கம் என்ன? அது எதுவாக இருந்தாலும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை மேற்கொண்டு நீதி வழங்கும் நோக்கம் அல்ல என்பதே தெளிவு.

சட்டமூலத்தின் உள்ளடக்கம்

இப்புதிய சட்டமூலத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்வதற்கு பிரதானமாக, இச் சட்டமூலத்தை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இப் புதிய சட்டமூலத்திற்கேற்ப ~~காணாமல் போனவர்களை தேடுவதற்கும், அவர்கள் தொடர்பாக தேடிப்பார்ப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தகவல் திரட்டுவதற்காகவும் மேற்கூறப்பட்ட காரியாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும், கருமங்களுக்கு தேவையான செயற்பாடுகளும், வழிகாட்டல்களை ஒழுங்கு செய்வதற்கும் இச்சட்ட மூலத்தின் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்காகவும் சம்பந்தம் இல்லையெனின் அதற்கான சகல காரணங்களுக்காகவும் நடவடிக்கைகளை திட்டமிடவும் காணாமல் போனவர்கள் தொடர்பில் காரியாலயம் ஸ்தாபிக்கப்படுகிறது.

சட்டமூலத்தின் 4(1) சரத்திற்கு ஏற்ப இக்காரியாலத்திற்கு 7 அங்கத்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

04(1)அ. OMP காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயத்திற்கு அங்கத்தவர்கள் 7 பேர் அடங்க வேண்டும். அவ் உறுப்பினர்கள் அரசியல் அமைப்பு சபையின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும்.

அந்த உறுப்பினர்களின் கலவை எவ்வாறு அமைய வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை. அதனால் இக்காரியாலயத்திற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள், காணமல் ஆக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுத்த இயக்கங்கள், ஜனநாயக உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அரசியல் கட்சிகள், மனித உரிமை சட்ட வல்லுனர்கள் போன்றோர் உள்வாங்கப்பட மாட்டார்கள் அதேநேரம் இப்பிரச்சினையை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் சதவீதம் உயர்வாக இருக்கும். அதேபோல் சட்டமூலத்தின் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் மிகக் குறுகியதாகவும், குறைந்த பட்சம் இக்குற்றங்களை புரிய கட்டளையிட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் கூட தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதை இரண்டாவது சரத்தில் காணக்கூடியதாக உள்ளது.

சட்டமூலத்தின் நோக்கமானது.

அ. காணாமல் போனோரைத் தேடுதல் மற்றும் அவர்கள் தொடர்பில் தேடிப்பார்த்தலுக்காக பொருத்தமான கட்டமைப்பை உருவாக்கலும் அந்த நபர்கள் காணாமல் போன சந்தர்ப்பத்திற்கான காரணங்களும் மற்றும் அவர்களின் முடிவைத் தெளிவாக்கிக்கொள்ளலும்.

ஆ. இச்சட்டமூலத்தின் பொருள்படி காணாமல் போனவர்கள் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சிபாரிசு முன்வைப்பதற்கும்.

இ. இச்சட்டமூல நடவடிக்கைகள் திட்டமிட்டுள்ளபடி காணாமல் போனவர்களினதும் அவர்களின் உறவினர்களினதும் உரிமைகள் மற்றும் பிணை பாதுகாத்தலும்.

ஈ. காணாமல் போனவர்கள் அல்லது அவர்களின் உறவினர்களுக்கு கிடைக்கக்கூடிய நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கான சரியான மார்க்கத்தை இனங்காண்பதற்கும்.

தேவையான சகல படிமுறைகளும் எடுக்கப்படும் என உறுதிப்படுத்தலும் ஆகும். அதன்படி இக்காரியாலயத்தின் ஊடாக நடைபெறும் விசாரணைகளை மேற்கொள்ளவும், நீதிமன்ற செயலொன்று நடைபெறும் சந்தர்ப்பத்தில் அத்தகவல்களைப் பெற்றுக்கொடுத்தல் மட்டுமே.

நீதிமன்ற செயற்பாடுகள் எப்போது நிகழுமென்று தீர்மானிப்பது, இன்றுவரையும் இச்செயற்பாடு தொடர்பான விசாரணையை தாமதப்படுத்திக் கொண்டிருக்கும் பொலிஸ் உட்பட நிறுவனங்களும் அதற்கு வழிகாட்டல் செய்யும் அரசாங்கமுமே.

சட்டமூலத்தின் 10(2) சரத்திற்கு ஏற்ப கால எல்லையின்றி காணாமல் போதல் எந்த காலப்பகுதியில் நடந்திருந்தாலும் அது தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் இருந்தாலும் சட்டமூலத்தின் 12 ஆவது சரத்திற்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்கப்டுவது மிக அண்மைய காலப்பகுதியில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பான சம்பவங்களே. இப்போதும் சாட்சிகள் இருக்கும் சம்பவங்களும் ழுஆP யின் கருத்து பிரகாரம் பொதுமக்களுக்கு முக்கியமானதாகவிருக்கும் சம்பவங்களுமே. அதனால் மிக முக்கியமான விசாரணைகள் தவிர்க்கப்படக்கூடிய அம்சங்கள் இச்சட்டமூலத்தில் உள்ளன. அதேபோல் இச்சட்டமூலத்தில் ~~காணாமல் போனவர்களை|| வரைவிலக்கணப்படுத்தியிருக்கும் விதம் கேள்விக்குரியதே.

சட்டமூலத்தின் 27 ஆவது சரத்து இவ்வாறுள்ளது. "காணாமல் போன நபர்" என்பது ஒரு நபரின் முடிவை அல்லது இருக்கும் இடம் நிச்சயமாக தெரியாது என நம்பப்படுவதும், அந்நபர் கணக்கெடுக்கப்படாதவராகவும், காணாமல் போனவராக நியாயமான முறையில் நம்பப்படும் முறையில் இருப்பவரே.

அ. யுத்தத்தினால் காணாமல் போன ஆயுதப் படைகளின் உறுப்பினர் ஒருவர் அல்லது பொலிஸ் உறுப்பினர் ஒருவர் உட்பட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடந்த ஆயுத சண்டையின் போதோ அல்லது அதன் பிரதிபலனாக இல்லை எனின் அந்த ஆயுத சண்டையின் பின் ~~யுத்தத்தின் போது காணாமல் போன நபர்|| எனக் குறிப்பிடப்படும் நபர் அல்லது

ஆ. அரசியல் அமைதியின்மை காரணமாக அல்லது சிவில் போராட்டக் கலகம் சம்பந்தமாக அல்லது.

இ. பலவந்தமாக காணாமல் ஆக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்கல் சம்பந்தமான சர்வதேச இணக்கப்பாடும், இணக்கப்பாட்டில் பலவந்தமாக காணாமல் ஆக்கல் என்ற பொருள்படுத்தப்பட்ட நபரொருவர் என்ற கருத்தாகும்.

இதில் கடந்த காலங்களில் சிறப்பாக கொழும்பு நகரை அண்மித்த, பொதுவாக முழு நாட்டிலும் பாதாளக்குழு, கொலையாளிகள், போதை பொருள் விற்பனையாளர்கள் என பல்வேறு முத்திரை குத்தப்பட்டு செய்யப்படும் காணாமல் ஆக்கல்கள் உள்வாங்கப்படுமா என்பது சந்தேகமே.

இக்காரியாலய பராமரிப்புக்கு தேசிய, சர்வதேச உதவிகள், நன்கொடைகள் பெற்றுக்கொள்ள சட்டமூலம் வழிவகுக்கின்றுது.

சட்ட மூலத்தின் 21 ஆவது சரத்து இவ்வாறு உள்ளது.

21. தேசிய சர்வதேச மட்டத்தில் பெற்றுக்கொள்ளும் பரிசுகள், அன்பளிப்புகள் உட்பட மேலும் அவர்ளுக்கு எல்லையின்றிய விதத்தில் ழுஆP யின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள தேவையான நிதியைத் தேடிக்கொள்வதற்கு ழுஆP க்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

இவ்வாறான முறைகளில் பல்வேறு நிதியும் அன்பளிப்பும் வழங்குவதினூடாக இக்கட்டமைப்புக்கு நிர்ப்பந்தம் செய்வதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு தனவந்தர்களுக்கும், இயக்கங்களுக்கும் வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இவ்வாறு அரசியல் கருமங்கள் அல்லது சட்ட பிரகார கருமங்களுக்காக நியமிக்கப்படும் நிறுவனங்களுக்கு பொது சமூக நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படுமே அன்றி அவற்றுக்கு நிதி வழங்குவதனூடாக தலையீடு செய்வதற்கு பல்வேறு பிரிவினருக்கு வழி அமைத்துக ;கொடுக்கப்படும் சம்பிரதாயங்கள் இல்லை. அரசாங்கம் இவ்வாறான கட்டமைப்பு தொடர்பாக கொண்டுள்ள மூலதனக் கொள்கை இதுவென்றால் எதிர்காலத்தில் பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு நன்கொடைகள் பெற்றுக்கொள்ளும் உரிமைகள் வழங்க இடமுண்டு. அடுத்த முக்கியமான பிரச்சினையாவது இச்சட்டமூலத்தின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பாக தேடுதல் காரியாலயத்திற்கு பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்கான இடம் வழங்குவதே. சட்டமூலத்தின் 11(அ) சரத்திற்கு ஏற்ப அதற்கு பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முடியும்.

11. OMP இற்கு கீழ் குறிப்பிடப்படும் சாதாரண அதிகாரங்கள் இருத்தல் வேண்டும்.

அ. தகவல்கள் பெற்றுக்கொள்ளும் போது உதவி பெற்றுக்கொள்ளும் செயலுக்காக தொழில்நுட்ப உதவியும் பயிற்சியும் (சட்டவைத்திய வேறு) பெற்றுக்கொள்ள மற்றும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளும் கருமங்கள் தொடர்பாகவே.

தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது சம்பந்தமாகவே தரவு வங்கி ஒன்றை உருவாக்கல் கருமத்திற்காகவும் தகவல்களின் ரகசியத் தன்மை சம்பந்தமாக, ஒப்பந்தங்களுக்கு உள்வாங்கல் உட்பட தேசிய மட்டத்திலோ வெளிநாட்டு அல்லது கூட்டாகவோ அவ்வாறு இல்லாமலோ.

இயக்கம் ஒன்றுடனோ அல்லது ஒரு நபருடனோ தேவை என ழுஆP கருதும் சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்களுக்கு உள்ளாதல். சாதாரணமாக தொழில்நுட்ப காரணங்களுக்காகவும் சேவை பெற்றுக்கொள்வவதற்கும் இவ்வாறான வியூகங்களுக்கு சாதாரண அதிகாரங்கள் இருந்த போதும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வி உள்ளது. அதனால் இச்சட்ட மூலத்தில் உள்ள பிரச்சினையானது கூட்டு எதிர்கட்சியினர் கூறும் விதத்தில் இராணுவ முகாம்களுக்கு அனுமதியின்றி உள்நுழைவதற்கான அதிகாரமோ சட்டமூலத்திற்கு விரோதமான சாட்சி பெற்றுக்கொள்ளும் அதிகாரம் போன்ற அதிகாரங்கள் இக்காரியாலத்திற்கு இருப்பதாக தெரியவில்லை. காணாமல் போனவர்களை தேடுவதற்காக அவ்வாறான அதிகாரங்கள் கட்டாயமாக தேவை. ஆனால் அவைகள் இல்லையெனின் இவ்வாறான கட்டமைப்புகளை உருவாக்குவதில் எவ்வித பிரயோசனங்களும் இல்லை. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில் நாம் மேற்குறிப்பிட்டது போல் இக்கட்டமைப்புக்கு வெளியார் தலையீடு கூடிய மட்டில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதே. அதேபோல் இப்பிரச்சினையில் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் இதில் பங்கேற்காமையே. சட்டமூலத்தைக் கொண்டு வருகையில் அரசாங்கத்தின் நோக்கமானது காணமால் போனவர்களுக்கு நியாயம் வழங்குவதல்ல, உலகின் ஏனைய நாடுகளுக்கு கண்காட்சியொன்றை முன்வைத்து அந்நாடுகளின் ஏகாதிபத்திய இயக்கங்களின் அனுமதியை வெல்லுவதும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் மக்கள் சக்திகளை ஏமாற்றுவதும் தெளிவாகத் தெரிகின்றது.

பிரச்சினை என்ன?

காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்குவதற்கான தீர்வு தொடர்பான கலந்துரையாடல்களுக்கு முதலில் பிரச்சினை என்னவென்று கலந்துரையாட வேண்டும். பிரச்சினையென்று மேலோட்டமாக தெரிவது நபர்களின் ஜனநாயக உரிமைகள் இல்லாது போய் அவர்களை கடத்துவதற்கு, கொல்லப்படுவதற்கு, வதைக்கப்படுவதற்கும் காணாமல் ஆக்கலுக்கு உட்படுத்தல் ஆகும். இது சம்பந்தமாக தேவைக்கு அதிகமான உதாரணங்கள் இலங்கை சமூகத்திற்கு கிடைத்துள்ளது. 1980 களில் காணாமல் ஆக்கல் மட்டுமல்ல அவ்வாறு காணமால் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றில் ஹபயாஸ்கோட் மனு முன்வைத்து நியாயம் கிடைக்க போராடிய விஜயதாச லியனஆராச்சி, காஞ்சன அபேபால போன்ற சட்டத்தரணிகள் கூட காணாமல் ஆக்கப்பட்ட அனுபவங்கள் எமக்கு உண்டு. அதன்பின் நாங்கள் 2000 ஆம் ஆண்டில் முதல் தசாப்தத்தில் வடக்கிலும் கிழக்கிலும் ஆயிரக்கணக்கில் காணாமல் போனது மட்டுமல்ல அந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்கு அவர்களுக்கு நீதி கிடைக்க செயற்பட்ட லலித், குகன் போன்ற அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட அனுபவத்தையும் அனுபவித்தோம். இவ்வாறு காணாமல் ஆக்கப்படுவது அரசாங்கத்திற்கு எதிரான அரசியலில் ஈடுபட்டவர்கள். இந்த குற்றங்களுக்கு பின்னால் இருப்பது அரசாங்கம் என்பது தெட்டத்தெளிவு. உறுதியாக இந்த காணமால் ஆக்கல்களுக்கு பின் இருப்பது அரச அடக்குமுறை கட்டமைப்பே. அதேபோல் இந்த காணாமல் ஆக்கல்கள் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல அதன் பின்புலத்தில் அரசியல் கதையொன்றும் உண்டு. தாம் அனுவித்த சமூக அழுத்தங்கள் மற்றும் சமூக அநீதிகளுக்கு முன் அமைதியாய் இராமல் அதற்கு எதிராக போராடியவர்களையே, ஆட்சியாளர்கள் அரச அடக்குமுறை கட்டமைப்பை பயன்படுத்தி காணாமல் ஆக்கியதது.

இச்சட்டமூலம் காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்காலிக தீர்வு திட்டத்தை முன்வைத்துள்ளதோடு உண்மையான பிரச்சினை தொடர்பாக எவ்வித வெளிக்காட்டலும் அதிலில்லை. அதுமட்டுமல்ல இவைகளின் நோக்கம் உண்மைப் பிரச்சினைகளை மூடி மறைப்பதே. நபர்களின் காணாமல் ஆக்கலுக்கு காரணம் அரச பலவந்தமும,; அரச அடக்குமுறையுமே. அரச அடக்குமுறைக்குக் காரணம் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு மக்கள் சக்திகளின் எழுச்சியே. அது ஒன்றில் பாட்டாளி மக்கள் முதன்மையாக ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சமூக பொருளாதார கொள்கைக்கு எதிரான எழுச்சியே. இல்லையெனின் சமூக பொருளாதார கொள்கைக்கு சமூக அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக ஆட்சியாளர்கள் தந்திரோபாயமாக பாவிக்கும் இனவாதத்தின் பெறுபேறாகவே அந்த போராட்டத்தில் அரசியல் தொடர்பாக எவ்வித இணக்கப்பாடின்மை இருந்தாலும் வடக்கில் நிகழ்ந்தது தேசிய அழுத்தத்திற்கு எதிரான எழுச்சியே என்பது தெளிவு.

ஒருபுறம் காணமல் ஆக்கல் உட்பட ஜனநாயகத்திற்கான பிரச்சினைகளுக்கு மூலக்காரணியாவது நவ லிபரல் சமூக பொருளாதாரக் கொள்கையே. இந்தக் கொள்கைக்கு எதிராக மக்கள் எழும்போது தொடர்ச்சியாக செயல்படக்கூடிய அடக்குமுறை ஊடாக எதிர்க்கும் சக்திகளை வாய்மூடச் செய்வதே. கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் போன்று தற்போதைய அரசாங்கமும் அந்த மக்கள் விரோத கொள்கையையே கடைபிடிப்பதனால் சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்வதனாலேயோ காரியாலங்களை ஸ்தாபிப்பதாலேயோ இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதென்பதும் எமது நம்பிக்கை. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பயனிப்பது இதே பாதையிலானால் எந்த காரியாலயங்கள் இருந்தாலும், காணாமல் ஆக்கல் உட்பட ஜனநாயக விரோத செயல்களுக்கு முயற்சிப்பதைத் தடுக்க முடியாது. அதேபோல் கேள்விக்கான பதிலை உண்மையான பதில்கள் போலியான பதில்களிலிருந்து வேறுபடுத்தி இணங்காண முடிவதும் இதன் அடிப்படையிலேயே.

போலியான தீர்வு

எங்களுக்கு இப்போதிருக்கும் ஒவ்வொரு அரசியல் கோணங்களிலும் காணாமல் போன நபர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலத்தைப் பயன்படுத்தி இருக்கும் அரசியல் அடிப்படை மற்றும் தந்திரோபாயங்கள் தொடர்பாக கலந்துரையாட முடியும். முதலில் இந்த சட்ட மூலத்தை முன்வைத்து அது ஜனநாயக உரிமைகளின் வரலாறு மிக்க முன் முயற்சியென கூக்குரலிடும் அரசாங்கத்தின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவதானத்தைச் செலுத்த முடியும். அரசாங்கம் இச்சட்டமூலத்தின் ஊடாக முயற்சிப்பது காணாமல் போனவர்களுக்காக நியாயத்தை வழங்குவதற்கு அல்ல. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் உட்பட ஏகாதிபத்திய இயக்கங்கள் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஐரோப்பிய நாடுகள் உட்பட்டவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே. இது உலகத்திற்காக முன்வைக்கும் கண்காட்சியாகும். இலங்கை மக்களுக்கு ஒரு ஏமாற்றமே. இதில் உண்மையான ஜனநாயக முயற்சி கிடையாது. அரசாங்கம் இப்பிரிவினரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி எடுத்தது. அந்நாட்டு ஆட்சியாளர்களின் அனுசரணையின் கீழ் கடன், உதவிகள் மற்றும் முதலீட்டுக் கவர்ச்சிக்காகவே கடந்த அரசாங்கத்தைப் போல் தற்போதைய அரசாங்கம் கடைபிடிக்கும் கொள்ளையிடும் நவ லிபரல் பொருளாதாரக் கொள்கைக்காக இந்த உதவிகள் தேவைப்படுகிறது. அதே நேரம் மக்கள் மீது துரோக, அழிவு பொருளாதார வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படுமானால்; அதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பை கட்டியெழுப்பல் கட்டாயமாகும். இதற்கு முன்பும் பல தசாப்தங்களுக்கு முன் காணாமல் போதல் ஆரம்பிக்கப்பட்டது அவ்விரோதங்களைக் கட்டுப்படுத்தவே. அதன் பிரகாரம் அரசாங்கத்திற்கு இப்பயணத்தின் மூலம் காணாமல் ஆக்கல்களை முடிவுக்கு கொண்டு வரும் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப வல்ல. அவ்வாறான செயல்களுக்கு பின்புலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தை வலுவூட்டுவதற்கே. அரசாங்கத்தின் சட்டமூலம் ஊடாக பொறியில் இருந்து விடுபடுவதற்கு பதிலாக மீண்டும் அப்பொறியில் சிக்குவதே. ஏகாதிபத்திய பொருளாதார திட்டங்களை வலுவூட்டுவதற்காக ஏகாதிபத்திய அனுசரணைக்காக செய்யும் கண்காட்சியின் மூலம் ஜனநாயகத்தை தோற்றுவிக்க முடியாது மட்டுமல்ல நீண்ட காலத்திற்கு ஆபத்திற்கும் உள்ளாகும். ஏகாதிபத்தியர்கள் இலங்கையின் ஜனநாயகத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு முன்வருகிறார்கள் என்ற தப்பான கருத்தை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. தற்போதைய உலகில் அரசியல் பொருளாதாரம் இராணுவ மய சக்;தி மையங்கள் உருவாகி இருப்பதோடு, இவற்றினிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பும்; உண்டு. இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்தும், ஏகாதிபத்திய மூலதன தேவை கருத்தும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் சகல ஏகாதிபத்திய நாடுகளிலும் இருப்பதோடு விசேடமாக இந்து சமுத்திரத்தின் அதிகாரத்திற்காக இந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் முக்கிய இடம் வகிக்கிறது. ஏகாதிபத்தியர்களின் தலையீடு இலங்கைக்கு ஏற்ற விதத்தில் நடப்பது இந்த நிலைமையின் உள்ளேயே. இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏகாதிபத்தியர்கள் தலையீடு செய்வது தமது அரசியல் தந்திரோபாய திட்டங்களுக்காகவே அன்றி ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பு காரணமாக அல்ல.

இலங்கையின் உதாரணத்தை எடுத்துக்கொண்டால் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பல நாடுகள் குரல் கொடுத்தது யுத்தத்தின் போது நடந்த மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம், அரசியல் கைதிகள் அடக்குமுறை சட்டங்கள், காணாமல் போதல், அரசியல் கொலைகள் ஆகியன சம்பந்தமாக. தற்போது அவர்கள் கடைபிடிக்கும் கொள்கைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அரசாங்கம் மாறின கையோடு அவர்களின் கொள்கைகளும் மாறியிருக்கின்றது. இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர்கள் அண்மையில் இலங்கைக்கு சமூகம் தந்தவேளை கூறியிருந்தமை அவர்கள் 180 பாகைக்கு திரும்பியுள்ளமை நிரூபனமாகிறது.

கூட்டு எதிர்கட்சி இங்கு கடைபிடிப்பது தமக்கு அதிகாரம் கிடைக்குமானால் சமூகம் எந்த அழிவுக்கு முகம்கொடுத்தாலும் பரவாயில்லை என்ற நாசகார அரசியல் பிரவேசத்தையே. நீதிமன்ற அதிகாரங்கள் இன்றி விசாரணை அதிகாரத்தை மட்டும் கொண்டுள்ள அரசாங்கத்திற்கு தேவையான சம்பவங்கள் சிலவற்றிற்கு மட்டும் விசாரணைகள் மட்டுப்படுத்தப்பட்டு மற்றைய சம்பவங்கள் காலதாமதத்தினால் மறைக்கப்பட இருக்கின்ற கட்டமைப்புத் தொடர்பாக இராட்சத முகத்தைக் காட்டும் நோக்கம் அதிகார பலப்பரீட்சையே அன்றி வேறு ஒன்றுமில்லை. இதனூடாக போசணையாக்கப்பட்டு சிஙகளம், தமிழ் சமூகங்களுக்கிடையே இடைவெளி இன்னும் அதிகரித்து சமூகம் என்ற வகையில் நாம் படுகுழியில் விழுவதே. அண்மைய காலங்களில் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த காணாமல் ஆக்கல்களுக்கு காரணம் தேசிய அழுத்தத்திற்கு எதிராக எழுந்த போராட்டம் இனவாத யுத்தமாக விருத்தியடைந்தமையே. அப்பிரச்சினையின் மூலக்காரணி இனவாதம். அதனால் இனவாதத்தை மேலும் வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையைத் தீர்த்து நடந்தவற்றிற்கு நீதி வழங்குவது அல்ல எதிர்கால சந்ததியினருக்கும் பிரச்சினையை உரிமையாக்குவதே. எனவே கூட்டு எதிர்கட்சியின் பிரவேசமும் நோயைத் தீவிரமடையச் செய்யும், மேலும் வேறு நோய்களைப் பரப்பும் மேலதிக விசமாகும்;.

 

 

பாராளுமன்றில் இச்சட்டமூலத்திற்கு கைதூக்கிய ஏனைய சக்திகள் தொடர்பாகவும் சுருக்கமாக குறிப்பிடல் வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் பிரச்சினைகளை முற்று முழுதாக அடித்துப்பறித்து, அதைத் தமது அரசியல் அதிகாரத்திற்காக பாவிக்கின்றது. தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது என்னவென்றால் சகல பிரச்சினைகளையும் அரசாங்கம் நிலைத்திருக்கும் எல்லைக்கு மட்டுப்படுத்தி உண்மையான தீர்வில் இருந்து வடக்கு மக்களை மேலும் அந்நியப்படுத்தலாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனை. எதிர்கால நல்வாழ்வு மற்றும் புனர்வாழ்வுக்காக பொது மன்னிப்பு வழங்கி சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோசத்தை முற்று முழுதாக காட்டிக்கொடுத்து அவர்கள் முன்வைத்த யோசனை தான் குற்றமற்றவர்களை விடுதலை செய்யவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கு போடவும், பிணை வழங்கக்கூடியவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்ற யோசனை. இது ஒன்றும் புதிதாக முன்வைக்கப்பட வேண்டிய யோசனை அல்ல. அரசாங்கம் தம்மை ஜனநாயகவாதி எனக் கூறிக்கொள்ளுமானால் கட்டாயமாக செய்யப்பட வேண்டியது ஒன்றாகும். இப்போது அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை அரச கட்டமைப்புக்கு உள்வாங்கி, அரச கட்டமைப்பினால் அடக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும் அரச கட்டமைப்பில் மட்டும் தான் என்ற மூட நம்பிக்கையை தமிழ் சமுதாயம் மீது வளர்க்கின்றார்கள்.

மக்கள் விடுதலை முன்னணி தமது அரசியல் வேலைத்திட்டதில் இடது, வலது சமூக ஜனநாயக வாதம், தேசிய வாதம் எனத்தேர்ந்தெடுக்காமல் கூழும் வேண்டும் மீசையும் வேண்டும் என்ற இரண்டும் கெட்டான் நிலைமையில் இருக்கின்றனர். தமது பிரதான அரசியல் கோசம் ஜனநாயக வாதம் என மேடைகளில் சொல்லித்திரிந்தாலும் மக்கள் விடுதலை முன்னணி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எவ்வித பிரச்சினைகளுக்கோ ஜனநாயக உரிமைகளுக்காகவோ முன் நிற்பதில்லை. அரசியல் கைதிகள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பில் எவ்வித அழுத்தங்களையும் செய்யவில்லை. அரசாங்கம் மற்றும் அதன் அடிப்படையிலான சக்திகளோடு இணக்கப்பாட்டுடன் பாராளுமன்றில் காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணி அதன்பிறகு நாட்டுக்கு எதிராக எவ்வித செயலுக்கும் ஆதரவு வழங்குவதில்லை என்றும் இராணுவ வீரர்கள் மீது கைவைக்க விடமாட்டோம் என சொல்லி இனவாத சக்திகளை சமாதானப்படுத்த முயற்சிக்கிறது. இது அவர்களின் அரசியல் வேலைத்திட்டத்தின் சிறு முதலாளித்துவ தன்மையை காட்சிப்படுத்தும் சந்தர்ப்பமாகும். தாம் காணாமல் போனவர்கள் சார்பில் பிரதிநிதித்துவம் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் அதேவேளை காணாமல் ஆக்கல்களுக்கு பொறுப்பானவர்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாக காட்டுகின்றது. இறுதியில் அதற்காக ரோஹன விஜேவீர சகோதரரின் கொலை தொடர்பாக விசாரணையையும் அதனோடு பின்னிக்கொண்டுள்ளது. இவ்வாறான வங்குரோத்து மற்றும் நிலையற்ற அரசியலின் ஊடாக இவ்வாறான பல்கூட்டு பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாது.

தீர்வு என்ன?

எமது நிலைப்பாடு என்னவெனில் காணாமல் போனவர்களுக்கு முழுமையான நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக ஆரம்பகட்ட நடவடிக்கையாக காணாமல் போதல் தொடர்பில் சகல உண்மைகளையும் சமூகத்திற்கு கூற வேண்டும். அதற்காக முதலில் செய்ய வேண்டியது முறையான விசாரணையை ஆரம்பிப்பது. இந்த காணாமல் ஆக்கலுக்கு பொறுப்பான அரச கட்டமைப்பு மீது நம்பிக்கை கொள்ள முடியாததனால், விசாரணைக்காக பாரிய சமூகத் தலையீடு அவசியம். செயற்பாடு சமூகத்திற்கு சிறந்த செயற்பாடாக இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியுமாயிருப்பது காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட இந்த உரிமைக்காக முன் நின்ற அனைவரினதும் போராட்ட இயக்கமொன்றை உருவாக்குவது அவசியமாகும். இவ்வாறான ஒன்றை ஏற்படுத்தி செய்யும் அழுத்தம் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியுமே தவிர சட்டமூலம் ஊடாக நிறுவப்படும் அரச கட்டமைப்பு தொடர்பாக நம்பிக்கை இல்லை. அத்தோடு காணாமல் ஆக்கல் தொடர்பான பிரச்சினையை தனிமைப்படுத்தாது, அதை யுத்தத்தினால் வீழ்ந்த சமூக பந்தத்தை பலப்படுத்தும் பரந்த சகவாழ்வு வேலைத்திட்டத்துடன் தொடர்புபடுத்த வேண்டும். அதாவது சகல மக்கள் பிரிவினருக்கும் சம உரிமை மற்றும் ஜனநாயகத்தைக் கோரும், இனவாத மற்றும் தேசிய அழுத்தத்திற்கு எதிரான கூட்டு வேலைத்திட்டம் ஒன்றுக்குள் காணாமல் போனவர்களின் பிரச்சினை உள்வாங்கப்பட வேண்டும்.

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய, அடக்குமுறை சட்டத்தை இல்லாதொழிக்க, இராணுவ மயத்தை அகற்றிக்கொள்ள, மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி மற்றும் சொத்துக்களை மீள கையளிக்க. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, யுத்தத்தால் எஞ்சிய அகதிகளின், விதவைகளின், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல், யுத்தத்தால் பாதிப்படைந்த சகலருக்கும் நட்டஈடு பெற்றுக்கொடுத்தல் போன்ற கோசங்களுடன் காணாமல் ஆக்குலுக்கு எதிரான கோசங்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அதுமட்டுமல்ல அரசியல், கலாசார, சமூக அசாதாரண நிலைமைய உருவாக்கும் சகல காரணிகளையும் வேரோடு பிடுங்கி எறிவதற்காக சம உரிமைப் போராட்டத்தை நாடி சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல மக்களும் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான அரசியல் உபாய மார்க்கத்தினால் மட்டுமே தீர்வு உண்டு.

முன்னிலை சோஷலிசக்கட்சி, சமஉரிமை இயக்கம் ஊடாக இனவாதத்திற்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் எதிராக சகல சக்திகளோடு போராடும் அதேவேளை அரசாங்கத்தின் புதிய லிபரல் பொறியிலும், இனவாதிகளின் இனவாத பொறியிலும் அகப்;படாமல் சமஉரிமை மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட பரந்த மக்கள் செயற்பாடொன்றை கட்டியெழுப்புதவற்காக முன்னிற்றல் வேண்டும். தீர்வு இருப்பது அங்கேயே.