Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

முஸ்லிம் அரசியல்வாதிகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க முடியாது!- முன்னிலை சோசலிச கட்சி

நாட்டிற்குள் தற்போது நடக்கும் வன்முறைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சம்பிரதாய முஸ்லிம் அரசியல்வாதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் உலாமாக்கள் சபையினால் தீர்க்க முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

மருதானை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,

 

 

நாட்டிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முற்போக்கான சமூக சக்திகள், இடதுசாரிகள் மற்றும் திட்டமிட்டு பணியாற்றும் மக்கள் சக்திகளால் மாத்திரம் தீர்க்க முடியும்.

ஒரு மாத காலத்திற்குள் பல்வேறு வன்முறைகள். இவற்றுக்கு அடிப்படைவாதரீதியில் பதிலளிக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் அடிப்படைவாதத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. முஸ்லிம் அடிப்படைவாதம் பிரச்சினையை உக்கிரமடைய செய்யும். முஸ்லிம் அடிப்படைவாதத்தின் உதவியுடன் இந்தப் பிரச்சினை தீர்க்க முயற்சிக்க வேண்டாம்.

முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களை வலுப்படுத்த வேண்டாம். மக்கள் அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டாம்.

சமூகத்தில் இருக்கும் முற்போக்கு சக்திகள், இடதுசாரி மற்றும் இனவாதத்திற்கு எதிரானவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு நாம் முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இவர்கள் தற்போது தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வன்முறைக்கு வன்முறையால் பதிலளிக்க வேண்டாம்.

நாட்டில் இருக்கும் முற்போக்கு, இடதுசாரி, லிபரல் கொள்கையை கொண்டுள்ளவர்களை இந்த பிரச்சினையில் தலையிடுமாறு கோருகிறோம். அனைவருடனும் இணைந்து கூட்டு மக்கள் சக்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தைய தாக்குதல்கள் 

ஏப்ரல் மாத நடுப்பகுதி முதல் இதுவரை 13 தாக்குதல்கள் மசூதிகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் கிராமத்தவர்களுக்கு கீழே தரப்பட்ட அட்டவணைப்படி நிகழ்த்தப்பட்டுள்ளன. 

 

14 மே       ஒனேகம,                     பொலன்னறுவ குடியிருப்புகளை (குடிசை) தாக்கியது மற்றும் அழித்தது
15 மே       செல்வநகர்,                திருகோணமலை முஸ்லிம் கிராமவாசிகள் மீது தாக்குதல்
15 மே       பாணந்துறை,            கொழும்பு மசூதி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
15 மே       கொகிலவத்த,           கொழும்பு மசூதி மீது தாக்குதல்
16 மே       செல்வநகர்,                திருகோணமலை முஸ்லிம் கிராமவாசிகள் மீது தாக்குதல்
16 மே       கொகிலவத்த,           கொழும்பு மசூதி மீது மற்றொரு தாக்குதல்
17 மே       பாணந்துறை,           கொழும்பு இரண்டு கடைகள் மீது தாக்குதல்
18 மே       வென்னப்புவ,           குருநாகல் ஒரு கடை எரிக்கப்பட்டது
21 மே       மல்லவபிட்டிய,        குருநாகல மசூதி மீது தாக்குதல்
21 மே       எல்பிட்டிய,                 காலியின் ஒரு கடை எரிக்கப்பட்டது
22 மே       மகரகம,                      கொழும்பு ஒரு கடை எரிக்கப்பட்டது
22 மே       ககவத்த,                     இரத்தினபுரி ஒரு கடை எரிக்கப்பட்டது
06 ஆனி  நுகேகொட,               கொழும்பு விஜயராம சந்தியில் கடைக்கு பெற்றோல் குண்டு தாக்குதல்