Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

Articles

ஆஸ்திரேலியாவில் சமவுரிமை இயக்கம் ஆரம்பம் (படங்கள்)

இன்று தேசத்தில், நாடு தழுவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பல போராட்டங்களை சமவுரிமை இயக்கம் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இனவாததுக்கு எதிரான நிகழ்வுகளை அது தென்பகுதியில் முன்னெடுத்து வருகிறது. ஆனி மாதம் முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிரான மதவாத, இனவாதத் தாக்குதல்களின் பின்னால் உள்ள இனவாத- மேலாதிக்க  சிந்தனை, அரச ஆதிக்க சக்திகளுக்கு   மக்களைப் பிரித்தாள சாதகமான காரணியாக உள்ளது . இதை முறியடிக்கும் நோக்கிலேயே கடந்த ஆடி மாதம் முழுவதும் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற தொனிப் பொருளில் கையெழுத்துப் போராடத்தையும், இன, மத, சாதிய வாதங்களுக்கு எதிரான ஒரு மாநாடையும் சமவுரிமை இயக்கம் நடத்தியது.

சமவுரிமை இயக்கத்தின் இவ்வாறான போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட புலம்பெயர் இலங்கை மக்களும், அவர்கள் வாழும் நாடுகளிலும் சமவுரிமை இயங்கங்களை ஆரம்பித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 27.07.2014 அன்று சிட்னி நகரில் அனைத்து இன மக்களும் ஒன்று கூடி இனவாதம் பற்றி விவாதித்ததுடன், சமவுரிமை இயக்கத்தையும்  அங்குரார்பணம்  செய்துள்ளனர்.