Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

Articles

மனித உரிமைக்காக அன்று பேரணி சென்ற மஹிந்த இன்று என்ன செய்கிறார்? குமார் குணரத்னம்

alt

பொது எதிர்கட்சியில் குறைந்தளவு ஜனநாயகத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று அதிகாலை நாடு திரும்பிய அவர், இன்று நண்பகல் 1 மணிக்கு கொழும்பு ராஜகிரிய லயன்ஸ் கிளப் (Lions Club) மண்டபத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பதிலாக மைத்திரிபாலவின் அரசாங்கத்தை கொண்டு வருவது என்பது, இலங்கையின் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தற்காலிக நிவாரணமாகவே இருக்கும்.

மஹிந்தவுக்கு பதிலாக மைத்திரி என்பது ஒரு இடைவெளியை போன்றது. இது இலங்கையின் பிரச்சினைக்கு இறுதித்தீர்வை தராது. எனது இலங்கை வருகை தாமதமானதற்கு காரணம் அரசியல் அழுத்தம்.

மனித உரிமைக்காக அன்று பேரணி சென்ற மஹிந்த ராஜபக்ஷ இன்று என்ன செய்கிறார்? பிரதான வேட்பாளர்கள் இருவரும் தேசிய பிரச்சினையை மறந்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேசியப் பிரச்சினையை காட்டிக் கொடுத்துள்ளது.

திடீர் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்பாளர்களினதும் கொள்கைகளில் மாற்றம் இல்லை எனவும் கல்வி, சுகாதாரம் மற்றும் தேசிய பிரச்சினை தொடர்பாக இருவரும் கொண்டுள்ள கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தற்காலிக நிவாரணங்களுக்கு பொதுமக்கள் ஏமாறக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடத்தப்பட்டிருந்த அவர் அதற்கான அபராதத் தொகையை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் செலுத்திய பின்னரே நாட்டினுள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=14868:2015-01-01-18-11-29&catid=150:lead-news&Itemid=113