Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மண்சரிவில் சிக்கிய மக்களின் நிலையை துயரமாக சித்தரிக்கும் வக்கிரமும் - புலம்பலும்

நிலச்சரிவில் புதைந்த மலையக மக்களுக்கோ இது துயரமல்ல இதற்கு முன்பும், இதுதான் அவர்களின் வாழ்கையாகும். "துயரத்துக்குரிய", "அனுதாபத்துக்குரிய", "நிவாரணத்துக்குரிய" மக்களாக காட்டுவது வக்கிரம்.

மண்சரிவை வைத்து பிழைக்கும் ஊடகங்கள், முதலாளிகள், அரசும் மட்டுமல்ல பேஸ்புக் மனித புலம்பல் வரை, அவர்களின் தீடீர் துயரமாக இட்டுக் காட்ட முனைகின்றது. அவர்கள் இந்த அவலத்தை விட மேன்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதான ஒரு பிரமையையே, நாட்டு மக்களிடம் விதைக்க முனைகின்றனர்.

நிலச்சரிவால் நிலத்தில் புதைந்ததால் ஆன அவலத்ததை விட, மேன்மையான வாழ்க்கையினை மலையக மக்கள் வாழவில்லை. இது தான் எதார்த்தம். இங்கு உறவுகளின் துயரங்களைத் தாண்டி, அவர்களின் சொந்த வாழ்க்கை சார்ந்து புதிய அவலமல்ல இது. காலாகாலமாக வாழும் வாழ்க்கை இதைத் தாண்டியதல்ல.

இந்த நிலச்சரிவில் சிக்கிப் புதைந்து போன மக்கள் பற்றிய கருசணையும் அக்கறையும் உண்மையானதா? இதை நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். அரசாங்கங்கள் தொடங்கி நாடு கடந்த தமிழீழ அரசு வரை, மூக்கால் சிந்தி வெளிப்படுத்துகின்ற அறிக்கைகள் அனைத்தும் அந்த மக்களின் வாழ்க்கை சார்ந்த எதார்த்தத்தை மறுதளிப்பதாகும்.

காலாகாலமாக சிங்கள - தமிழ் முதலாளிகள் என அனைவரும் வெள்ளைக்கார காலனி காலம் தொடங்கி மலையக மக்களை சுரண்டி குவித்த சொந்துகள் சார்ந்து, தங்கள் கட்சி அரசியல் மேல் நின்றுதான், மண்சரிவில் சிக்கிய மக்களை பற்றி பேசுகின்றனர். அந்த மக்களின் வாழ்க்கையையும், அதைச் சுற்றிய சுரண்டல் முறையையும் மாற்றுவது பற்றிய கருசணையில் இருந்தான அக்கறையல்ல. இது தான் உண்மை. தனிநபர்களின் புலம்பல்கள் கூட பெரும்பாலும் பேஸ்புககிற்கானதே ஓழிய, இதை மாற்றுவதற்கான சிந்தனை நடைமுறையில் இருந்தல்ல என்பதும் வெளிப்படையான மற்றொரு உண்மை.

மலையக மக்கள் வெள்ளைக்கார காலனிய முதலாளிகளால் சுரண்டுவதற்காக கொண்டுவரப்பட்ட முதல், இன்று வரை அவர்களின் கொத்த்தடிமையிரான "லயன்" வாழக்கை முறைமை மாறிவிடவில்லை. இன்று கறுப்பு முதலாளிகளால் அதே மாதிhயே சுரண்டப்படுகின்றனர்.

மலையக மக்கள் உழைத்துப் பண்படுத்திய நிலம் தொடங்கி, அவர்கள் குடியிருக்கும் வீடு வரை அவர்களுக்கு சொந்தமில்லை. வெள்ளைக்கார "லயன்" குடியிருப்புக்களில் "கூலிகளாக" அடைக்கப்பட்ட மலையக மக்களின் வாழ்க்கையானது, வாழ்வதற்கு ஏற்ற எந்த அடிப்படை வசதிகளையும் கொண்டதல்ல. இப்படிப்பட்ட அந்த லயனில் வாழ்ந்த மக்கள் தான், நிலச்சரிவில் சிக்கிப் புதைந்து போனார்கள்.

இந்த நிலம் முதலாளிக்கு சொந்தம் என்றால், அதை சட்டப்படி பாதுகாப்பதே அரசுதான். இந்த அவலங்களில் மலையக மக்களை வாழும் படியான ஒரு வாழ்க்கைகையை தான் அரசு திணித்திருகின்றது. இதை விட்டால் வேறு வழியில்லை என்ற வாழ்க்கை நிலையில் வாழும் கொத்தடிமை முறையிலான வாழ்க்கை முறையாகும். இந்த மக்களைப் பற்றி தோட்ட முதலாளிகளுக்கோ - அரசுக்கோ அக்கறை கிடையாது. நாட்டில் இயங்கும் அனைத்து முதலாளித்துவ கொள்கை கொண்ட கட்சிகள் கூட அக்கறைப்படுவதில்லை. தேர்தலை மட்டும் அடிப்படையாக கொண்ட இடதுசாரிகள் கூட, வாக்கு பெறுவதற்கு வெளியில் அவர்களின் வாழ்கையிட்டு அக்கறைப்படுவதில்லை.

மாதசந்தாவை இலக்காகக் கொண்டு தொழிலாளார் - முதலாளி முறையை பாதுகாத்து பிழைக்கும் தொழிற்சங்கங்களுக்கு கூட அவர்களின் இந்த வாழ்க்கையிட்டு அக்கறை கிடையாது. இலங்கையில் உழைக்கும் மக்களையிட்டு என்ன மாதிரியான கொள்கைகளைக் கொண்டு செயற்படுகின்றரோ அதையும், அதைவிட "கூலிகளாக" இனம் கண்ட ஒதுக்கும் கொள்கையும் தான், மலையாக மக்களின் பொது அவலங்களாகும்.

இந்த நிலச்சரிவில் புதைந்த மக்களின் துயரம் பற்றிய மத்தியதர வர்க்கத்தின் வெற்று அனுதாபங்களுக்கும், மேட்டுக் குடிகளின் நடிப்புக்கும் வெளியில், மலையக மக்கள் அனுதினம் இந்த புதை குழி வாழ்கையைத்தான் வாழ்கின்றனர். இந்த மண் சரிவில் சிக்கியது, அவர்களுக்கு அதிர்வில்லை. அதாவது இதைவிட மேன்மையான வாழ்க்கையினை அவர்கள் வாழ்வில்லை.

அனால் இதை வைத்து பிழைக்கின்ற ஊடகங்கள் முதல் பேஸ்புக் தனிநபர்களின் புலம்பலைக் கடந்து, உழைக்கும் மக்களின் அவலங்களுக்கு பதில், மகிழ்ச்சியான வாழக்கையை மாற்ற போராடுவது மட்டும் தான் உண்மையான சமூக அக்கறையுடன் கூடிய அக்கறையும் கருசணையுமாகும்;.