Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது!

பாராளுமன்ற தேர்தலில் இனவாதததையும் - மக்கள் விரோத நவதாரள பொருளாதார கொள்கையைக் கொண்ட கட்சிகள் அதிக வாக்குகளைப் பெற்றதுடன், அதன் பிரதிநிதிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

இலங்கையில் நவதாரள பொருளாதாரத்தை பாதுகாக்கும் இனவாத அரசு அதற்கு அமைவான எதிர்கட்சிகளின் கொள்கையும் தொடரும். யார் ஆள்வது என்ற குத்துவெட்டுகளும் - ஆளும் கூட்டத்துடன் பேரம் பேசி பிழைப்பதும் அடுத்த ஐந்தாண்டுக்கான திட்டமாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலும், வென்ற உறுப்பினர்களும் மக்களுக்கு எதையும் செய்யப்போவதில்லை.           

தாங்கள் வெல்வதற்காக மக்களை சிங்கள - தமிழ் - முஸ்லீம் - மலையகம் என்று  இன-மொழி அடைப்படையில் பிரித்தன் மூலம், இனவாதத்தைத் தூண்டி வெற்றிபெற்று உள்ளனர். மக்கள் தங்கள் வாழக்கை சார்ந்தோ - இனங்களுடன் சேர்ந்து வாழும் சொந்த எதார்த்ததில் இருந்து வாக்களிக்கவில்லை.

கட்சிகள் மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் நிற்கவில்லை. தமிழன் - சிங்களவன் என்று ஒருவருக்கு எதிராக ஒருவரை பிரிக்கும் மனித விரோத தேர்தல் பிரச்சாரத்ததை முன்னெடுத்தன் மூலம் - செயற்கையான இனவிரோத தன்மையை முன்வைத்தே தேர்தலை எதிர்கொண்டன. 

ஊடகங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழன் - சிங்களவன் என்ற பிரிந்து நின்று பிரச்சாரத்தை முன்னெடுத்தனவே ஓழிய, இனவாதத்துக்கு எதிராக தமிழ்-சிங்கள மக்களின் ஐக்கியத்தை முன்வைத்தோ - மக்கள் நலப் பொருளதாரக் கொள்கையை முன்வைத்தோ செய்திகளையோ - கட்டுரைகளையோ வெளிக்கொண்டு வரவில்லை. மாறாக இனவாதத்தையும் - நவதாரளவாதத்தையும் முன்வைத்த குத்துவெட்டையே கருத்தாக்கி மக்களை பிளந்து பிழைத்துக் கொண்டன.

மக்களின் அன்றாட இயல்பான வாழ்க்கைக்கு முரணாக செயற்கையாகத் தூண்டிய இனவாதமே தேர்தலாகி- இறுதில் தேர்தல் முடிவாகியது.

இனவாதத்துக்கும் - நவதாரள பொருளாதார கொள்கைக்கும் எதிராக மக்களை அணிதிரட்டும் நோக்கில் முன்னிலை சோசலிச கட்சியின் தேர்தல் பிரச்சாரமும் - அதன் அடிப்படையில் கிடைத்த சிறியளவிலான வாக்குகள் தான், இலங்கை நாட்டினதும் - மக்களினதும் ஆன்மாவாகவும் - விடுதலைக்கான நெம்புகோளாகவும் இந்த தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றது.