Thu10062022

Last updateSun, 19 Apr 2020 8am

பீகாரில் கைதிகள் போராட்டம். நாம் என்ன செய்வோம் ?

 

பீகார் தலைநகர் பாட்னா மத்தியச் சிறையில் இருக்கும் கைதிகள் மருத்துவர் பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேள்வியுற்ற பின் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது இன்றைய செய்தி.

மருத்துவர் பினாயக் சென்னை ‘தேசத் துரோகி’ என்று ஒரு நீதிபதி தண்டித்த விஷயத்தை தம்மால் தங்கிக் கொள்ள முடியாது என்றும் அதனைக்  கண்டித்தும் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என சிறையில் இருக்கும் நூற்றுக் கணக்கான கைதிகள் அனைவரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாக IANS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

 

பீகார் என்றால் பலரும் அறிந்து இருப்பது அறிவது கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல், அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு மாநிலம் என்பதே. அந்த மாநில முதல்வர் தொடங்கி, எம்.எல்.ஏ, எம். பி  க்கள் பெரும் பகுதியினர் கொலை, கற்பழிப்பு, கொள்ளை, ஆட்கடத்தல், ஊழல் என பலவாறான கிரிமினல் குற்றம் சட்டப்பட்டவர்களே. ஆனாலும், தொடர்ந்து அவர்கள் தேர்தலில் நின்று ஜெயித்து ஆட்சியாளர்கள் ஆகி ‘இந்த நாட்டை வழி நடத்தப போய்  விட்டதால் அதன் சிறையில் மிஞ்சி இருப்போர் பெரும்பாலும் அப்பாவிகள் அல்லது விசாரணைக் கைதிகள். அவர்களோ ஒரு தேசத் துரோகிக் காக குரல் கொடுக்கிறார்கள். எப்படியிருக்கிறது இன்றைய இந்தியா !!.

நல்லோர் ஒருவர்க்குத் தண்டனை வழங்கிய அநீதிபதி வர்மாவைக் கண்டித்து மருத்துவர் பினாயக் சென் விடுதலை ஆகும் வரை நாள் தோறும உண்ணாவிரதம், தொடர் முழக்கங்கள், சொற் பொழிவுகள் நடத்தி தமது எதிர்ப்பைக்  காட்ட முடிவு செய்து இருக்கிறார்களாம்  இந்தக் கைதிகள். ஒரு வேளை, பினாயக் சென்னை வெளியில் விட மறுத்தால், தாம் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் பல கைதிகள் தெரிவித்து இருப்பதாகவும் IANS செய்தி தெரிவிக்கிறது. சிறை அதிகாரிகளின் கூற்றுப் படி, பீகார் சிறை வரலாற்றில் கைதிகள் நடத்தும் இத்தகையதொரு போராட்டம் இதுவே முதல் முறை.

பீகார் மாநிலத்தில் பயங்கரவாதிகள், குற்றக் கும்பல்கள், கொள்ளைக்காரர்கள் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகி விட்டபடியால் சிறையில் மிஞ்சி இருப்பது எல்லாம் அப்பாவிகள், அறிவாளிகள், அறிஞர்கள் அல்லது புரட்சியாளர்கள் மட்டுமே.  ஆகவே, எதிர்ப்பு சிறையி இருந்து தான் வரவேண்டி இருக்கிறது. காலத்தின் கோலம் !!.

பகவான் புத்தனுக்கு ஞானம் தோன்றியது இன்றைய பீகார் மண்ணில் தான். ஒரு வேளை புத்தன் இப்போது மீண்டும் வருவானாகில் அவன் சிறையில் இருந்துதான் வர வேண்டும். அவன் தவம செயய பாட்னா  சிறைக்குள் வளர்ந்து நிற்கும் அரச மரத்தடி தான் அவனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு. அதனால் தான் சிறைக் கைதிகள் புத்தனின் வழியில் தம்மையே வருத்திக் கொண்டு உண்ணா விரதம் இருக்கிறார்கள் போலும்.

இது இப்படி இருக்க, காந்தியின்  கொலைகாரர்களான ஆர. எஸ்.எஸ் அமைப்பினர் தாம் ஏற்கனவே, இஸ்லாமியர்களை பெருவாரியாகக் கொலை செய்து வருவது போதாது என்று கருதி, இந்திய நீதி பரிபாலனத்தை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என அறிவித்து உள்ளனர். இன்றைய தேதியில் பினாயக் சென் தீர்ப்பை வழங்கிய நீதிபதி வர்மாவை விமர்சனம் செய்யக் கூடாது என்றும் அவரை ‘ஆதரித்து’ நீதியை நிலைநாட்ட வேண்டுமாய் அறிக்கை வெளியிட்ட ஒரே நிறுவனம் இதுதான்.

மதத் தீவிரவாதிகளான ஆர. எஸ்.எஸ் அமைப்பினர் எந்த சட்டத்தையும் நீதியையும் மதிக்காதவர்கள் என்பது நாடறிந்த செய்தி. ஆனால, அவர்கள் பினாயக் சென் ஒரு மனித நேயர் ஏழைகளின் பங்காளர், ஒரு மக்கள் மருத்துவர் என்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அவர் பெற்ற தண்டனையை நியாயப் படுத்தி தம்முடைய கொலைக்  களத்தில் பயின்ற உண்மைச் சீடரான சத்திஸ்கர் முதல் மந்திரி ராமன் சிங் தவறு ஏதும்  செய்திருக்க மாட்டார் என்பதில் அவ்வளவு தீர்மானமாக இருக்கிறார்கள்.

பேய்கள் அரசாண்டால் பிணம்  தின்னும் சாத்திரங்கள் என்பது பழமொழி . அதுதான் இது போலும்.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் திலகர் தேசத் துரோகி என்று தண்டிக்கப்பட்ட போது  ஆற்றாமையில் தவித்த மகாகவி பாரதி இப்படிப் பாடிவைத்தான்:   ………

நாம் என்ன செய்வோம்! துணைவரே! – இந்தப்
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம்.

திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு

பலதிசையும் துஷ்டர் கூட்டங்களாச்சு
பயல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு.

தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார்,

…… பட்டம்பெற்றோர்க்கு மதிப்பென்பது மில்லை
பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை

சட்டம் மறந்தோர்க்குப் பூசை குறைவில்லை
சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை

—-

பாடல்: நாம் என்ன செய்வோம் ?

மகாகவி பாரதியின்  தேசியக் கவிதைகள் என்ற தொகுப்பில் இருந்து எடுக்கப் பட்டது.