Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

'கல்வி வெள்ளை அறிக்கை" வரலாற்றை மறந்த ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலவசக் கல்வியையும், அதன் மதிப்பையும் பற்றி இந்நாட்களில் பிதற்றித் திரிகிறார்.

திடீரென தூக்கத்தில் விழித்தவரைப் போன்று ஏதேதோ கூறுகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் அதன்படி, கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுவதாகவும் கூறும் அவர், இவற்றை தடுப்பதற்காக சமூகமுறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமெனவும் கூறுகிறார். இதில் முக்கியமான விடயம் என்னவெனில், அவர் வரலாறை மறந்துவிட்டிருப்பதுதான்.

ஐதேக. வினால் அறிமுகப்படுத்தப்பட்ட நவ தாராளமய பொருளாதாரக் கொள்ளையின் மகிமையால் கல்வியும் வியாபாரப் பண்டமாக சமூகமயப்படுத்தப்பட்டது. கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 90களின் ஆரம்பத்தில் ‘கல்வி வெள்ளை அறிக்கை” அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவால் கொண்டுவரப்பட்டது.

அதன் மூலம் கல்வி தனியார்மயம் இரகசியமாகவே செயற்பட்டது. அந்த வரலாற்றை அவர் மறந்திருக்க வேண்டும் அல்லது மக்கள் மறந்துவிட்டிருக்க வேண்டும் என அவர் நினைத்திருக்கக் கூடும்.

சமூகமுறையின் உண்மையான மாற்றம் என்பது முதலாளித்துவத்தின் மரண ஊர்வலத்தை தாமதமாக்குவதல்ல; சமூக, பொருளாதார, அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலுமே ஏற்படக் கூடிய பாரிய மாற்றமாகும். அதற்காக, மக்கள் சார்ப்பான மாற்றத்தையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.