Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

வவுனியாவில் சிறுநீரக நோயால் 1000 பேர் உயிரிழப்பு!

வவுனியா மாவட்டத்தின் 29 கிராமங்களில் சிறுநீரக நோயால பாதிக்கப்பட்ட பலர் உள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் காரணமாக இதுவரை ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

சிறுநீரக நோய்களுக்கு பெரும்பாலும் விவசாயிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பிரேமரட்ன சுமதிபால தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் தென்பகுதியிலேயே இந்த நோய் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நோயினால் தமிழ் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை.

இதற்கு காரணம் தமிழ் விவசாயிகள் மத்தியில் இரசாயன பசளை பாவனை ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளமையாகும் என்று காரணம் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையின் வடமத்திய மாகாணத்திலேயே சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.