Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

செங்கொடிகள் தலைசாய! செவ்வணக்கம் தோழா!

மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் பிரதம செயலாளருமான சட்டத்தரணி பாலா தம்பு காலமானார். 

92 வயதான இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று மாலை காலமானதாக தெரியவந்துள்ளது.  அன்னாரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ளன. 

பாலா தம்பு 1922 மே 23ம் திகதி நீர்கொழும்பில் பிறந்தார். நீர்கொழும்பு நியூஸ்டட் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்ற இவர் தொடர்ந்து கொழும்பு றோயல் கல்லூரியில் இடைநிலைப் படிப்பைத் தொடர்ந்தார்.  இலங்கைப் பல்கலைக்கழகத்தில் 1943 இல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து தாவரவியலில் சிறப்புப் பட்டம் பெற்ற பாலா, 1944 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்த இவர் வழக்கறிஞர் ஆனார். 

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பாலா தம்புஇ ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய இடதுசாரித் தலைவர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார். 

1947ஆம் ஆண்டு அரச ஊழியர் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவர் அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தில் இணைந்து 1948 பெப்ரவரியில் அதன் செயலாளர் ஆனார். 

1928 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக ஊழியர் சங்கம், பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியின் செல்வாக்கிற்குள் உட்பட்டது.  1964 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜச் கட்சி நான்காம் அனைத்துலகத்தில் இருந்து விலகி அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசில் இணைந்ததை அடுத்து, பாலா தம்பு அக்கட்சியில் இருந்து விலகி இலங்கை புரட்சிகர சமசமாஜக் கட்சியின் தலைவரானார்.  

பாலா தம்பு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியதோடுஇ உழைக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது நிர்வாகங்களுடனும், அரசுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.