Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

முதலமைச்சர் மக்களை சந்திப்பது கூட செய்தியாகின்றது!

"வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், அமைச்சரகள் பா.டெனிஸ்வரன், பா.ஐங்கரநேசன், பா.சத்தியலிங்கம், ரி. குருகுலராஜா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் மன்னார் ஈச்சலவக்கை மற்றும் சன்னார் ஆகிய கிராம மக்களை சந்திக்கச் சென்றிருந்தனராம்"

மக்களை சந்திப்பது கூட வேடிக்கையான, ஆச்சரியமான செய்தியாகின்றது. மக்கள் விரோத அரசியலை இனம் கண்டு கொள்ள இது போதுமானது. கூட்டமைப்பும், வடமாகண முதலமைச்சர் விக்கியும், மக்களுடன் மக்களாக வாழாமையையும் அங்கிருந்து அவர்களின் அரசியல் உருவாகாமையையும் இந்தச் செய்தி அம்பலமாகின்றது.

கூட்டமைப்பின் இனவாத அரசியல் என்பது மக்களில் இருந்து பிரிந்து வெள்ளை வேட்டிக்குள்ளும், அமெரிக்கா- இந்தியா என்று நக்கித் திரியும் கைக் கூலித்தனம் தான் என்பதே உண்மையாகும்.

மக்களை அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுடன் அணிதிரட்டாத, அவர்களைத் தங்களை சொந்த பிரச்சனைக்காக அணிதிரட்டி போராட்ட மறுக்கும் கும்பல் தான், வெளியில் இருந்து மக்களை சந்திக்கச் செல்லுகின்றனர். உழைத்து வாழும் மக்களை சுரண்டிவாழும் வர்க்கம் சந்திக்கின்றது என்பதே உண்மையாகும். இப்படி மக்களை சந்திப்பதன் மூலமே, மக்களின் பிரச்சனை தெரிந்து கொள்ளும் நிலையில், வடமாகாண மக்களை பிரதிநித்துவம் செய்து ஆளுகின்றனர் என்பது தான் வடக்கு மக்களின் இன்றைய அரசியல் துயரமாகும்.