Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதம் - மதவாதத்துக்கு எதிரானவரா பொது வேட்பாளர்!

"ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தங்களுடைய கொள்கை, திட்டங்களை பரிசீலிக்குமாறு பொதுபலசேனா விடுத்துள்ள வேண்டுகோளை ஐக்கிய தேசிய கட்சி கருத்தில் கொள்ளும்.

அரசாங்கத்திற்க்கு எதிராக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து வலுவான கூட்டணியொன்றை அமைப்பதே எமது நோக்கம் என்று" கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

இனவாதம் - மதவாதம் அனைத்ததையும் கூட்டியள்ளி பொது வேட்பளார் மூலம்  "ஜனநாயக" ஆட்சி அமைக்க போவதாக கூறுவதும், அதை முற்போக்கின் பெயரிலும் இடதுசாரியத்தின் பெயரிலும் தூக்கியாடுவது அங்கும் இங்குமாக நடந்தேறுகின்றது. மகிந்தாவை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி சாமியாடும் இந்த "ஜனநாயக" பக்தர்கள்  ஒவ்வொரு தேர்தலில் போதும் இதையே கூறி வருவதும், ஆளை மாற்றுவதும் நடந்தேறுகின்றது. ஆனால் மக்கள் அதே நிலையில் சுரண்டப்படுவதும், அதை மூடிமறைக்க  இனவாதம் மாதவாதம் மூலம் பிரித்தாள்வதும் நடத்தேறுகின்றது. தொடந்து கொண்டிருக்கின்றது.

இலங்கை வாழ் அனைத்து இனமக்களும் தாம் முகம கொடுத்துக் கொண்டிருக்கின்ற இனவாதம், மதவாதம், பொருளாதாராம் உள்ளிட்ட பிரச்சனைகளிற்கு  ஆட்சியில் ஜந்து வருடத்திற்கு ஒருவரை மாற்றி மாற்றி ஏற்றி இறக்குவதால் தீர்வினை காண முடியாது. 

அரசியல் மாற்றம் ஒன்றே அனைத்து மக்களும் முகங்கொடுக்கின்ற பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வினை காண வழிசமைக்கம் என்பதனை கொண்டு செயலாற்ற வேண்டியது கடமையாகும்.