Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

மஹிந்த கோமாளி!

"புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட வாழ்த்து செய்தியில், நாட்டின் முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாம்.

புனித அல் குர்ஆனின் வழிகாட்டல்களின் அடிப்படையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும், ஏனைய இன மத சமூகங்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு புனித குர்ஆனின் உதவுவதாகவும் கூட கூறியுள்ளார்."

மேடையில் கோமாளி வேஷம் போட்டு வேடிக்கை காட்டும் பாத்திரம் போல், நாட்டு மக்கள் முன் கோமாளியாகவும் இடைக்கிடை ஜனாதிபதி வேஷமும் போடுகின்றார். ஒருபுறம் முஸ்லிம் கலாச்சார மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மேல் வன்முறைகளை ஏவிவிடுவதன் மூலம், முஸ்லிம் வர்த்தகத்தை அபகரிக்கும் செயற்பாட்டையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது என்பது இலங்கையின் எதார்த்தம்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதம் - மதவாதம் மூலம் சிங்கள மக்களுக்கு எதிராக முஸ்லிம் குறுந்தேசிய இன-மத அடிப்படைவாதத்தை தூண்டிவிடும் அரசு, சிங்கள - பௌத்த மக்களின் அரசாக இருப்பதே அரசின் உண்மையான முகமாகும்.

இதை மூடிமறைக்க கோமாளி வேஷம் போடும் ஜனாதிபதி "நாட்டின் முன்னேற்றத்திற்கு" முஸ்லீங்கள் உழைத்தாக கூறுகின்றார். எந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு? நவதார கொள்கை மூலம் நாட்டை கொள்ளை அடிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் முன்னேற்றத்துக்காக செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கையில் வாழும் உழைக்கின்ற மக்களுக்கு எதிராக அவர்களுக்குள் இன- மத வாதங்களையே விதைப்பதும் அதை அறுவடை செய்வதையே நாட்டு மக்களுக்கு அவர் பரிசளிக்கின்றார்.

மக்களை இன-மத மோதலுக்குள் தள்ளி, நவதாரளமயத்தை மக்களின் எதிர்ப்பின்றி முன்னெடுப்பதே நாட்டின் முன்னேற்றம் என்கின்றார்.