Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

ரணிலைச் சந்தித்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் துரோகம்

ரணில் விக்ரமசிங்கா அவரது லண்டன் விஜயத்தின் போது முக்கியமான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களை சார்ந்து சிந்திக்காதவனுக்கும், இனவாதிக்கும் பட்டறிவு கிடையாது. பேரினவாத கட்சிகளுடனும், தலைவர்களுடன் சுற்றி சுற்றி நக்கவும் குலைக்கவும் தெரிந்தளவுக்கு, மக்களை நேசிக்கத் தெரியாது. தங்கள் தமிழ் இனவாதம் மற்றும் வர்க்க நலனை முன்னிறுத்தி பேரம் பேசுகின்றவர்கள், உழைக்கு மக்களுக்கு எதையும் தரப்போவது கிடையாது என்பதே கடந்த வரலாறுகள். தொடர்ந்து பேரினவாத தலைவர்களுடன் பேச்சு வார்த்ததையிலும் பேரங்களிலும் ஈடுபடும் தமிழ் அமைப்புகள், உழைக்கும் சிங்கள மக்களுடன் இணைந்து அரசுக்கும்  போரினவாதத்துக்கும் எதிராக போராடுவதை மறுக்கின்றவர்களாக தொடர்ந்து இருக்கின்றனர்.

சிங்கள உழைக்கும் மக்களை எதிரியாக காட்டும் இக் கும்பல், அவர்களுடன் இணைவதை துரோகதமாக தூற்றும் இவர்கள், தங்கள் சொந்த வர்க்கம் சார்ந்த சிங்கள பேரினவாதத் தலைவர்களுடன் கூடி அரசில் கூத்தாடுகின்றனர். தங்கள் வர்க்க ஆட்சி அமைப்பது பற்றி பேரம் பேசுவதையே, தங்கள் சொந்த அரசியலாகத் தொடர்கின்றனர். இந்த பின்னனியில் தான் "பொது வேட்பாளர்" என்ற மூகமுடியை போட்டுக் கொண்டு, மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காக எல்லா இனவாதிகளும் ஒன்றாக களமிறங்குகின்றனர்.