Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

ஐ.நாவுக்கு காவடி எடுத்த 33 மாகாணசபை உறுப்பினர்களும் போர்க்குற்றவாளிகளும்

"இலங்கைப் பாதுகாப்புப் படையினர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பாரியளவில் படுகொலை செய்ததாகத் தெரிவித்து" 33 மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கை அடுத்து, கூட்டமைப்பின் 33 மாகாணசபை உறுப்பினர்களுக்கு நீதிமன்த்தில் ஆஜராகுமாறு உத்தரவினை நீதிமன்றம் விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் முறைப்பாடு, அறிக்கை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் இனவாதத்தை தூண்டுவதற்கே உதவுகின்றது. ஐ.நா செயற்பாடுகள் இனவாதத்தை இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களின் நோக்கில் அல்லாமல் தூண்டி, அதன் மூலம் மேற்கு நாடுகளின் நலன்களை இலங்கையில் அடைய முனைகின்றது.

அன்று இந்தியா இயக்கங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி தனது நலனை அடைந்தது போன்று, ஐ.நாவும் இனவாத்தை இலங்கையில் தூண்டி வருகின்றது. அன்று இந்தியா தன் நலனை அடைய கைக்கூலி இயக்கங்களை உருவாக்கியது போன்று, இன்று ஐ.நாக்கு கூட்டமைப்பு கைக் கூலிகளாக்கியுள்ளனர்.

தமிழ்-சிங்கள மொழி பேசும் மக்களிடையயே ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலம், அரசையும் இனவாதத்தையும் தோற்கடிப்பதன் மூலம், போர்குற்றங்களை மக்கள் விசாரணை செய்ய முடியும்.

இதற்கு பதில் இந்தியா, அமெரிக்கா, ஐ.நா என்று காலம் காலமாக மக்களை எமாற்றுகின்ற பரஸ்பர இனவாத செயற்பாடுகள் எதிரான இரண்டு இனவாத அணிகளின் அரசியல் செயற்பாடாக இருக்கின்றது என்பதே உண்மை.