Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கு செல்ல வெளிநாட்டவருக்கு தடை!

2009 முன் புலிகள் வடக்கில் இருந்து மக்களை வெளியேற தடை செய்தது போன்று, வடக்கு மக்களை வெளியார் சந்திப்பதையே இன்று அரசு தடுத்து நிறுத்தி இருக்கின்றது. அரசின் இனவாதம் போன்று, மக்களை வெளி உலகத் தொடர்பில் இருந்தும் தனிமைப்படுத்தி சிறையில் அடைத்து இருக்கின்றது.

"தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்ககூடிய தற்போதைய விடயங்களை கருத்தில்  கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக" அரசின் கூற்றுகின்றது, தங்கள் போர் குற்றங்களை பற்றிய தகவல்கள் ஆதாரங்கள் வெளியேறுவதை தடுப்பதும், அதே நேரம்  வடக்கில் "பயங்கரவாதம்" தோன்றியுள்ளதாக காட்டி அதை தடுக்க தம்மை மீளவும் ஜனதிபதியாக்குமாறு கோருகின்ற பேரினவாத பின்புலத்திலேயே, வடக்கு மக்கள் மீண்டும் பலியிடப்படுகின்றனர்.

வடக்கு மக்களை "சிங்கள" மக்களுக்கு எதிராக முன்னிறுத்தி கட்டமைக்கும் அரசின் தேர்தல் பிரச்சார உத்தி, இதற்குள் மட்டும் முடங்காது. கடந்தகால "கிறிஸ்;" மனிதன், "கோபி"  என்ற கற்பனை புலி போல், இனவாத தேர்தல் பிரச்சாரத்துக்கான காட்சிகளை வடக்கில் அரங்கேற்றுவதன் மூலமும், மீண்டும் மகிந்த ஜனதிபதியாக முனைவார் என்பது கடந்ந அனுபவம் எங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது.

இந்த அரசின் இனவாத பிரச்சாரத்துக்கும், அதன் திட்டமிட்ட நடத்தைகளுக்கும் பலியாகமல், விழிப்புடன் இருந்து இனவாததுக்கும் அதன் நடத்தைக்கும் எதிராக அணிதிரள்வது இன்று அவசியமானது.