Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிகளின் தடை நீக்கமும் - 50 லட்சம் கையெழுத்தும் எதற்காக?

50 லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகும் மகிந்தாவின் கனவே, புலிகளின் மீதான தடை நீக்கத்துக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரமாகும்.

புலிகளின் தடை நீக்கத்தை புலத்து வியாபாரப் புலிகள் தங்கள் வெற்றியாக பீற்றிக் கொள்ள, மகிந்தாவுக்கோ அது தேர்தல் வெற்றிக்கான கொண்டாட்டமாகின்றது.

2005 இல் மகிந்த - புலிகள் இரகசிய ஓப்பந்தம் மற்றும் நிதி கொடுப்பனவு மூலம், வடகிழக்கு மக்கள் தேர்தலில் வாக்கு போடுவதை புலிகள் மூலம் தடுத்து மகிந்தா ஜனாதிபதியானது அனைவரும் அறிந்ததே.

இன்று மீண்டும் இதே பாணியில் புலிகளின் தடை நீக்கும் பின்னணியில் மகிந்தா அரசும் புலத்து புலியும் இணைந்து செயற்பட்டு இருப்பதையும், புலி தடை நீக்கத்தைக் காட்டி மீண்டும் ஜனாதிபத்தியாகும் முயற்சி தான் கையெழுத்தில் ஆரம்பித்து இருக்கின்றது.

புலிகளை தமிழரின் அடையாளமாக தமிழனவாதிகள் மட்டும் காட்டவில்லை, மாறாக அரசும் கூட சிங்கள மக்கள் மத்தியில் இதைத்தான் கூறுகின்றது. இதன் மூலம் இனவாத தேர்தல் பிரச்சாரத்தை ஜனாதிபதி தொடக்கி வைத்து இருக்கின்றார்.

இனவாதத்துக்கு எதிரான சமவுரிமை இயக்கத்தின் கையெழுத்து இயக்கத்துக்கு எதிராக, இனவாதத்துக்கு ஆதாரவான கையெழுத்து இயக்கத்தை "புலித் தடை நீக்கத்துக்கு எதிரான" மூகமுடியின் கீழ் அரசு தொடங்கி இருக்கின்றது.

இனவாதத்தை எதிர்த்த தேர்தல் பிரச்சாரமே, இத் தேர்தலில்; மக்களை நேசிக்கின்றவர்களின் அரசியல் செயற்பாடாக இருக்க முடியும்.