Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கமலேஸ் சர்மாவினது இலங்கை தொடர்பான புதிய கண்டுபிடிப்பு

"தேர்தல் செயலகம் முழுமையாக சுயாதீனமானதாக இயங்கவில்லை" எனறு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

இதே கமலேஸ் சர்மா யுத்தகால போர் குற்றங்களை பாதுகாக்க, அரசுடன் சேர்ந்து நின்றவர், இன்று தேர்தல் செயலகம் "சுயாதீனமாக" இல்லை என்கின்றார்.

யுத்தத்துக்கு முந்தைய - பிந்தைய இலங்கைத் தேர்தல்கள் அனைத்தும், முதலாளித்துவ வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் வண்ணம் தன்னை மாற்றி வந்திருகின்றன. ஆளும் வர்க்க ஜனநாயகத்தின் பண்பு நிலை மாற்றம் தான் சர்வாதிகாரம் என்பது அரசியல் என்ற உண்மை, இலங்கையில் யதார்த்தமாக பிரதிபலிகின்றது.    

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது தேர்தலை மட்டும் மக்களுக்கான நடைமுறையாகக் கொண்டது என்பதால், அதை எப்படி வெல்வது என்பது வரை அனைத்தும் அதன் உள்ளடக்கமாகிவிடுகின்றது. "சுயதீனம்" என்பது முதலாளித்துவத்தில் உண்மையல்ல என்பதும், இனி தோதல் முறையில் நடிக்க எதுவுமில்லை என்பதால் அப்பட்டமாகவே அரங்கேறுகின்றது.