Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பரீஸ், லண்டன், மிலான் நகரங்களில் இலங்கை புதிய அரசினது ஜனநாயக உரிமை மறுப்புக்கு எதிரான கண்டனப் போராட்டங்கள்!

ராஜபக்ஷ ஜனநாயக விரோத ஆட்சியை தோற்கடித்து அதிகாரத்திற்கு வந்த ஆட்சியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது மக்களின் அடிப்படை உரிமைகளான அரசியல் - குடியியல் உரிமைகளையே. பதவிக்கு வந்துள்ள புதிய அரசு இவை பற்றி கொடுத்த வாக்குறுதிகளை மறந்து முன்னைய அரசு போலவே ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.

அரசியல கைதிகள் சம்பந்தமான பிரச்சினை ஜனநாயக விரோதத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. இது சம்பந்தமாக எழுச்சிபெற்ற சமூகத்தின் எதிர்ப்பு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது. புதிய அரசு இது குறித்து மௌனமாகவே இருக்கின்றது. அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களின் அடிப்படை குடியியல் உரிமைகளை உறுதி செய்யுமாறு புதிய ஆட்சியாளர்களை வேண்டுகின்றோம்.

கடந்த ஆட்சியில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் நாட்டுக்கு திரும்பி அரசியல் நடவடிக்கைகளில ஈடுபடும் உரிமை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனை உறுதி செய்வது இன்றைய அரசாங்கத்தின் மீதுள்ள கடமையாகுமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பரீஸ், லண்டன், மிலான் நகரங்களில் இந்த வார இறுதியில் புதிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை காலதாமதமின்றி நடைமுறைபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.

1. அடக்குமுறை காரணமாக புலம் பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!

2. ராஜபக்ஷ ஆட்சியில் அரசியல் உரிமை பறிக்கப்பட்ட அனைவருக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமையை வழங்கு!

3. தோழர் குமார் குணரத்தினத்தை நாட்டுக்குள் அரசியலில் ஈடுபட இடமளி!

*A Protest Demonstration will be held outside Sri Lanka high Commission, France.
Date: FRIDAY  06/02/2015 Time: 3:00 - 5:00PM

Adresse : 16 Rue Spontini, 75016 Paris, ligne 2 - Metro : Porte Dauphine

*A PROTEST DEMONSTRATION WILL BE HELD OUTSIDE SRI LANKA HIGH COMMISSION, UK.

DATE: Saturday 07/02/2015 TIME: 1:00 - 3:00PM

Address: Place: Sri Lanka High Commission, No. 13, Hyde Park Gardens, London W2 2LU Nearest Tube Stations – Lancaster Gate

* A PROTEST DEMONSTRATION WILL BE HELD IN MILANO, ITALY

DATE: Saturday  07/02/2015 TIME: 3:00PM

Address: Piazza Duca Daosta, Milano, Stazione Centrale