Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

பிறப்புரிமைக்கான போராட்டம் வெற்றி !!போராட்டமே ஒரே வளி !

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப் பட்டார்.

 

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகன் என்று உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

2006 இல் இராஜாபக்ஷ அரசாங்கத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, இரகசியமாக அவுஸ்திரேலியாவில் குடியேறி அங்கு வாழ்ந்து வந்த அவர் 2011 இல் மீண்டும் இந்த நாட்டுக்கு வருகை தந்திருந்த வேளை கொட்டாபே இராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் பாதுகாப்பு பிரிவு குழுவொன்றினால் கடத்தப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டார்.

 

 

2015 இல் மீண்டும் இந்த நாட்டுக்கு வந்த அவர் தனது பாரம்பரிய வம்சாவழி குடியுரிமையை அங்கீகரிக்குமாறு பல தடவை விண்ணப்பித்தபோதும் அவை நிராகரிக்கப்பட்டது. 2015 நவம்பர் 4ந் திகதி தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு , வதிவிட வீசா இன்றி தங்கி இருந்த அவுஸ்திரேலிய பிரஜை என்ற நிலைப்பாட்டில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ஒரு வருட சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டார்.

 

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 8 வது பிரிவுக்கு ஏற்ப இலங்கையின் வம்சாவழி குடியுரிமை வழங்குமாறு முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அவருக்கு குறித்த ஆவணத்தை அனுப்பியுள்ளது.


அவரின் குடியுரிமையை அங்கீகரிக்குமாறு இந்த நாட்டின் அரசியல் கட்சிகள், சிவில் இயக்கங்கள் உட்பட அதிகமானவர்கள் வருடக் கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு , அவ்வாறான பின்னணியில் மென்மேலும் அவரின் அடிப்படை உரிமையை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. 2016 டிசம்பர் மாதம் விடுதலை ஆனபின் மீண்டும் ஒரு முறை வம்சாவழி குடியுரிமைக்கு விண்ணப்பித்ததன் பின் அரசாங்கம் அதை பரிசீலித்து ஏற்றுக் கொண்டது.. அதற்கேற்ப , அவுஸ்திரேலிய குடியுரிமை விலக்கிக் கொண்ட குமார் குணரட்னத்தின் வம்சாவழி குடியுரிமை விண்ணப்பத்தை ஏற்று அதற்கு இசைவாக குடியுரிமை குடியகல்வு திணைக்களம் அந்த அங்கீகரிப்பை செய்துள்ளது.

 

1981 இல் மக்கள் விடுதலை முன்னணியில் அரசியலில் இணைந்து இடதுசாரிய செயற்பாட்டுக்கு வந்த பிரேம்குமார் குணரட்னம் , 1989 போராட்டத்தில் கொல்லப்பட்ட ரஞ்சிதம் குணரட்னத்தின் இளைய சகோதரர் ஆவார். ஜே,வி .பி . 1989 அழிவின் பின் 1993இல் மீண்டும் பிரதான அரசியலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்த போது முன்னின்று செயற்பட்டு முதலாவது மத்திய குழு உறுப்பினராகவும் தேர்தெடுக்கப் பட்டார். பல வருடங்களாக காணப்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக 2011 இல் ஜே. வி. பி. யில் இருந்து வெளியேறிய சிரேஷ்ட உறுப்பினராவார்.


2012
இல் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஆரம்ப மத்திய குழு உறுப்பினராகவும், 2017 பிப்ரவரி மாதத்தில் நடந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் 2 வது தேசிய மகாநாட்டில் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.