Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மீரியாபெத்த மக்களுக்கு சுவிஸ் -இலக்கிய சந்திப்பு 2014 சார்பில் உதவிகள்

இன்று (29.10.2015) மீரியபெத்த மண் சரிவு அவலம் நடைபெற்று ஒரு வருடமாகிறது. மண் சரிவால் பாதிக்கபட்ட மக்களில் பெரும்பான்மையானோர் இன்னமும் அகதிகள் போன்ற நிலையில், நிரந்தர வாழ்விட வசதிகள் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையைக் கருத்திற் கொண்டு, கடந்த வருடம் சுவிஸ் -இலக்கிய சந்திப்பு 2014 இல் சேர்க்கப்பட்ட நிதி, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையின் அடிபடையில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்ய உபயோகிக்கப்பட்டது. 

அவ் உபகரணங்கள் அம்மக்களின் மத்தியில் அரசியல் மற்றும் சமூகப் பணியாற்றும் களப்பணியாளர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்பணியை படிப்பகம் நிறுவனத்துடன் இணைந்து, சுவிஸ் இலக்கிய சந்திப்பு  2014 இக்கு பொறுப்பாக இருந்த பத்மபிரபா மகாலிங்கம், புதுமைலோலன் மகாலிங்கம் மற்றும் தோழர்கள் செயற்படுத்தினார். படிப்பகம் நிறுவனம்; மலையக செயற்பாட்டாளர்களுக்கும், இலக்கிய சந்திப்பு செயற்பாட்டாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

உதவி நிகழ்வு படங்களுடன்; சொந்தங்கள், வீடு, வாசல்களை இழந்த மக்களின் அவல வாழ்வையும் பல படங்கள் எமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. தேர்தல் காலத்தில் அரசாங்கமும் மலையக அரசியல்வாதிகளும் கொடுத்த வாக்குறுதிகள் காற்றிலே பறந்து போய்விட்டன.

மண்சரிவின் பாதிப்புக்குள்ளான மக்கள் பாழடைந்த தேயிலை தயாரிக்க்கும் தொழிற்சாலையில் அரசாலும், மலையக அரசியல்வாதிகளாலும் தள்ளிவிடப்பட்டுள்ள நிலையில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பரிதவிக்கின்றனர்.

உதவிகள் இவர்களது பிரச்சினைக்கு தீர்வைத் தராது. இந்த மக்களிற்கு அரசு கொடுத்த வாக்குறுதியான நிதந்தர புதிய வீடுகளை உடனடியாக கட்டித் தரும் படி போராடுவதே ஒரே வழி